பிளஸ்1 வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவியர்களுக்கு மவுலானா ஆஸாத் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதியான மாணவ, மாணவியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் ராஜேஷ் வெளியிட்ட அறிக்கை: "கல்வியில் சிறந்து விளங்கி வசதியின்றி கல்வியினை தொடர இயலாத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த மாணவிகளுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு மவுலானா ஆசாத் தேசிய கல்வி உதவித்தொகை திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டம் தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மதங்களை சேர்ந்த பிளஸ்1 படிக்கும் மாணவிகளுக்கும் மத்திய அரசின் மவுலானா ஆஸாத் கல்வி அமைப்பு மூலம், 12,000 ரூபாய் கல்வி உதவித்தொகை இரு தவணைகளில் வழங்கப்படுகிறது.
இந்த கல்வி உதவி தொகை கல்வி கட்டணம், பாடப்புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் உண்டு உறைவிட கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 959 சிறுபான்மையினர் மாணவிளுக்கு நிதி வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்வி உதவித்தொகை பெறுவதற்கு சிறுபான்மையின மாணவிகள் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பில் குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று நடப்பாண்டில் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 1 வகுப்பு படிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
இதை உறுதி செய்ய விண்ணப்பத்துடன் வருமான சான்று மற்றும் 20 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற சாரா முத்திரை தாளில் உறுதி ஆவணம் அளிக்க வேண்டும். தகுதியான மாணவிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து தாங்கள் படிக்கும் பள்ளியில் சமர்பிக்க வேண்டும்.
கல்வி நிலைய தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் தங்கள் கல்வி நிலையத்தில் பிளஸ்1 வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று சரிபார்த்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிற் சேர்க்கை ஒன்றில் குறிப்பட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்ப படிவம் மற்றும் பிற்சேர்க்கை 1 மற்றும் 2ல் குறிப்பிட்டுள்ள படிவங்கள் ஆகியவற்றுடன் "மவுலானா ஆசாத் எஜிகேஜஷன் பவுண்டேசன், செல்ம்ஸ் ரோடு புது டெல்லி -110055" என்ற முகவரிக்கு வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
upload forms for the minority scholoarship applicaiton
ReplyDelete