மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசு நடப்பு கல்வியாண்டில் பள்ளிகளில் பகவத் கீதையை பாடமாக அறிமுகப்படு்த்தியுள்ளது. இதற்கு எதி்ர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி மக்ளின் கவனத்தை திசைதிருப்பவே மாநில அரசு இத்தகயை முடிவை மேற்கொண்டுள்ளது என குற்றம்சாட்டியுள்ளது.
மத்திபிரதேச மாநில அரசு வரும் கல்வியாண்டான 2013-14-ம் ஆண்டில் துவக்க பள்ளிகளில் பகவத் கீதையை பாடமாக கற்றுத்தரப்படும் என அறிவித்தது. இதன் அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையில் கற்கும் மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பு ஆங்கிலம் மற்றும் இந்தி கற்கும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் சிறப்பு இந்தி கற்று கொடுக்கும் பள்ளிகளில் 10-12-ம்வகுப்பு படிக்கும் மாணவர்களும் , சிறப்பு ஆங்கிலம் கற்று கொடுக்கும் பள்ளிகளில் 11-12 ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் ஒரு பாடமாக பகவத்கீதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் இத்ததைய நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து எதிர்கட்சியும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான அஜய்சிங் கூறுகையில் மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலை கவனத்தில் கொண்டு அடிப்படை பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...