தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல் நிலைபள்ளிகள் என அனைத்திலும் பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன.
உதாரணமாக உயர்நிலை பள்ளிகளில் கிராம கல்விக் குழு ( VEC ), பெற்றோர் ஆசிரியர் கழகம் (PTA), பள்ளி மேலாண்மைக் குழு ( SMC ), பள்ளி கட்டிட வளர்ச்சிக் குழு ( SMDC ), அன்னையர் தின குழு என பல்வேறு குழுக்கள் செயல்படுகின்றன.
இவற்றில் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலரும் பல்வேறு பதவிகளில் இருந்து வருகின்றனர். இவர்களில் சுதந்திரதினத்தன்று கொடியேற்றுவது குறித்து சில, பல பள்ளிகளில் சர்ச்சை ஏற்ப்படுகிறது. இதற்கு பள்ளி சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டால் தலைமையாசிரியர் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு சாதகமாக உள்ளார் என எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே இவற்றைத் தவிர்க்க அரசு ”புரோட்டாகால் திட்டம்” ஒன்றை அரசாணையாக பிறப்பித்து பள்ளிகளுக்கு வழங்கலாம். மக்கள் பிரதிநிதிகளில் இந்த பதவியில் உள்ளோர் சுதந்திர தினத்தன்றும், இந்த பதவியில் உள்ளோர் குடியரசு தினத்தன்றும் கொடியேற்ற வேண்டும். பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள், மற்றும் பள்ளிகளில் செயல்படும் பல்வேறு குழுக்களின் தலைவர்கள் என வரிசைபடுத்தி இன்னார் இல்லையென்றால், அடுத்ததாக இவர் கொடியேற்றலாம் என தெளிவாக பள்ளிகளுக்கு ஆணை வழங்க வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே கொடியேற்ற வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உரிய பதவியில் உள்ளோர் இல்லையென்றால் அடுத்த பதவியில் உள்ளோர் கொடியேற்ற வேண்டும் எவரும் இல்லையென்றால் பள்ளி தலைமை ஆசிரியரே கூட கொடியேற்றலாம். ஆனால் மிகச்சரியாக குறிப்பிட்ட நேரத்தில் கட்டாயமாக கொடி ஏற்றியாக வேண்டும் என அரசு ஆணையிட்டால், காலை உணவை கூட சரியாக சாப்பிடாமல் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட பள்ளிக்கு மகிழ்ச்சியாக வரக்கூடிய மாணர்வகள் சோர்ந்து, வழி மீது விழி வைத்து காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்கப்படலாம்.
இதனால் சுதந்திர தின விழா தேச பக்தர்களின் நினைவையும், நம் பாரத நாட்டின் பெருமையையும் போற்றி பாதுகாக்கும் உண்மையான தினமாக, மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்.
இவ்வாறு பெற்றோர்களும் கல்வியாளர்களும் எதிர்பார்க்கின்றனர்.
arumai
ReplyDeleteSuperb idea
ReplyDeleteSuperb idea
ReplyDeleteSuperb idea
ReplyDeleteithu nalla seyal
ReplyDeleteஇது மட்டும் பிரச்சனை இல்லை .மேலும் ஒரு வேண்டுகோள் தேசிய விழாக்களில் கொடி ஏற்றும் போது உள்ள விதிமுறைகளை தங்கள் இணையத்தில் வெளிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஏன் என்றால் இம்முறை சுதந்திர தினத்தன்று மழை பெய்யததால் கொடி ஏற்றலாமா?கூடாதா? என்ற ஐயம் இது சார்ந்த விளக்கம் பெற விரும்புகிறேன்.
ReplyDeleteஇது மட்டும் பிரச்சனை இல்லை .மேலும் ஒரு வேண்டுகோள் தேசிய விழாக்களில் கொடி ஏற்றும் போது உள்ள விதிமுறைகளை தங்கள் இணையத்தில் வெளிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் ஏன் என்றால் இம்முறை சுதந்திர தினத்தன்று மழை பெய்யததால் கொடி ஏற்றலாமா?கூடாதா? என்ற ஐயம் இது சார்ந்த விளக்கம் பெற விரும்புகிறேன்.
ReplyDelete