இந்தியாவில் உயர்கல்வி நிறுவனங்களில் முதன்மையாக திகழ்வது ஐ.ஐ.டி., இன்று அதன் தனித்துவம் குறைகிறதா என சந்தேகம் எழுந்துள்ளதாக பீகார் "சூப்பர் 30" நிறுவன இயக்குனர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். இவர் பீகாரில் ஆண்டுதோறும் ஏழை மாணவர்கள் 30 பேருக்கு, இலவசமாக ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வு பயிற்சி அளித்து வருகிறார்.
" மத்திய அரசு ஐ.ஐ.டி., கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை
அதிகரித்து வருவதால், அதன் உண்மையான சிறப்பம்சம் குறைகிறது. ஏனெனில் இடம் அதிகரிப்பால், இந்தாண்டு நூற்றுக்கணக்கான இடங்கள் காலியாக இருந்தன" என அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: ஐ.ஐ.டி.,யில் இடங்களை அதிகரிப்பதற்கு பதிலாக, சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் சிறந்த ஆசிரியர் பயிற்சி வசதியுடன் கூடிய புதிய கல்லூரிகளை, "என்.ஐ.டி.," போன்ற பெயர்களில் நாடு முழுவதும் தொடங்கலாம். ஐ.ஐ.டி., கல்லூரி என்பது, ஐ.ஐ.டி., மட்டுமாகவே இருக்க வேண்டும்.
அப்போதுதான் அதன் தனித்தன்மை நீடித்திருக்கும். இதுதவிர மத்திய பிரதேசத்தில் "சூப்பர் 30" கிளையை தொடங்க வேண்டும் என்ற அம்மாநில முதல்வர் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கோரிக்கைக்கு பதிலளித்த ஆனந்த்குமார், "முதல்வரின் கோரிக்கைக்கு நன்றி. ஆனால் தற்போது பாட்னாவை தவிர, நாட்டின் வேறு எங்கும் கிளையை தொடங்கும் எண்ணம் இல்லை" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...