தமிழ்நாடு அறிவியல் இயக்க ஆய்வுக் கட்டுரைகள் தயாரிக்கும் போட்டியில் பங்கேற்க, மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்போட்டிகளில் நடுநிலைப்பள்ளி 6, 7 மற்றும் 8ம் வகுப்புகளில் இருந்து வகுப்புக்கு ஒருவர் வீதம் கலந்துகொள்ளலாம். இடைநிலைப்பள்ளி பிரிவில் 9, 10ம் இரு வகுப்புகளில் இருந்தும் மூன்று பேர் வீதமும், மேல்நிலைப்பள்ளி பிரிவில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் இருந்து 3 பேர் பங்கேற்கலாம்.
போட்டிகள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழி மாணவர்களுக்கு தனித்தனியாக நடத்தப்படுகிறது. போட்டியில், நுண்ணறிவு, இயற்பியல், வேதியியல், வானியல், உயிரியல் மற்றும் பொதுஅறிவு ஆகிய சுற்றுகளில் நடத்தப்படுகிறது. தாலுகா அளவிலான போட்டியில் வெற்றிபெறும் மாணவர்கள், வரும் 31ம் தேதி, ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான போட்டியிலும், மாவட்ட போட்டியில் வெற்றிபெறுபவர்கள் மண்டல மற்றும் மாநில போட்டிகளிலும் பங்கேற்க தகுதி பெறுவர்.
மேலும், மத்திய அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில், ஆண்டுதோறும் மாணவர்கள் இடையே ஆய்வுத் திறனை வளர்க்கும் வகையில், "தேசிய குழந்தைகள் அறிவியல் காங்கிரஸ்" என்ற நிகழ்ச்சி, தேசிய அளவில் நடக்கிறது. சென்னை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஆய்வுக் கட்டுரை தயாரிக்கும் போட்டியில் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறது.
ஐந்து மாணவர்கள், ஒரு வழிக்காட்டி ஆசிரியரின் வழிக்காட்டுதலுடன், மூன்று மாதம் தங்களது ஆய்வுக் கட்டுரையை தயாரிக்கவேண்டும். இந்த ஆண்டிற்கான ஆய்வுத் தலைப்புக்கு, "ஆற்றல், தேடல், கையகப்படுத்தல் மற்றும் சேமித்தல்" என தலைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் இம்மாதம் 31ம் தேதிக்கு முன்பாக பதிவு செய்யவேண்டும்.
மேலும், தகவல் வேண்டுவோர் 94422 17439 என்ற மொபைல் எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு ராஜூ கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...