"மாணவர்களுக்கு விடாமுயற்சியும், சகிப்பு தன்மையும் இருந்தால் அனைத்து சவால்களை வெற்றி கொள்ளலாம்" என முன்னாள் துணைவேந்தர் வைத்தியநாதன் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வைத்தியநாதன், முதலாம் ஆண்டு வகுப்புகளை துவக்கி வைத்து பேசியதாவது:
"மாணவர்கள் விடாமுயற்சி மற்றும் சகிப்பு தன்மையை தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் அனைத்து சவால்களையும் சந்திக்கலாம். இங்குள்ள சிறந்த உள் கட்டமைப்பு வசதிகளை மாணவர்கள் முறையாக பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற்று பல்கலைகழக அளவில் சாதனை படைக்க பாடுபட வேண்டும்.
படிப்புடன், விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் போது, மாணவன் புத்துணர்ச்சி பெற்று படிப்பில் ஆர்வமுடன் கவனம் செலுத்த முடியும். முக்கியமாக கல்லூரிக்கு தவறாமல் வருகை தந்து படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையின் லட்சியத்தை அடைய வேண்டும்." இவ்வாறு முன்னாள் துணை வேந்தர் டாக்டர் வைத்தியநாதன் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...