அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக, பட்டம், முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், தொலைதூரக் கல்வி இயக்கங்கள் மூலம் உயர்கல்வி பயிலவும், பகுதி நேரமாக சேர்ந்து படிக்கவும், அரசு அனுமதித்துள்ளது.
இதில், எம்.பில்., - பிஎச்.டி., போன்ற பகுதி நேர ஆய்வு கல்விக்கு, இயக்குனர் அனுமதியும், பி.எட்., - எம்.எட்., போன்றவை படிக்க, மாவட்டக் கல்வி அலுவலர் அனுமதியும் பெற வேண்டும். இதை பின்பற்றி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலர், முழு நேர வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். அதற்கு அனுமதி வேண்டி, ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர்.
இதையடுத்து, "அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடி படிப்பில் சேர அனுமதி வழங்குவதை, தவிர்க்க வேண்டும்" என அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு, ஆணையில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக்கழகங்களில், தொலைதூரக் கல்வி மூலம், பி.எட்., பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் சேர்ந்து படிக்க, ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் தடை இல்லை.
நேரடி சேர்க்கை மூலம், உயர்கல்வி படிப்பை அனுமதிக்க, அரசு ஆணை எதுவும் இல்லை. அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், படிப்புக்காக, விடுப்பில் சென்றால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்படும்.
எனவே, நேரடி சேர்க்கையில், பி.எட்., பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பில் சேர, அரசாணை ஏதும் இல்லாத நிலையில், அதற்கான அனுமதி வழங்குவதை, அதிகாரிகள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
பயனுள்ள தகவலுக்கு நன்றி தெரிவிப்பதோடு, அந்த அரசாணையையும் வெளியிடவேண்டும் என்ற கோரிக்கையையும் தெரிவிக்கிறோம்.
ReplyDeleteஎம்.பில்., எந்த பல்கலையில் தொலைதூர கல்வியில் உள்ளது என்ற் தகவ்ல் தேவை. யாராவது அறிந்திருந்தால் senthilkumar.muruganandam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப்வும்.
ReplyDeletewhere is m.ed.,degree part time course?
ReplyDelete