Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எம்.பில்/பி.எச்டி/எம்.எட் ஊக்க ஊதிய உயர்வுக்கான தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என்ற தலைமை ஆசிரியர் உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்காலத் தடை

    தேனி மாவட்டத்தை சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் மற்றும் பிரகாஷம் இரு ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கிய எம்.பில் ஊக்க ஊதிய உயர்வுக்கான தொகையை (recovery) திரும்ப செலுத்த மாறு  அவர்களுக்கு அவர்களின் தலைமை ஆசிரியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் .

   

             இதையடுத்து இத்தலைமை ஆசிரியர்களின் RECOVERY  உத்தரவு கடிதத்திற்கு எதிராக மேற்கூரிய இருவரும் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அத்தலைமையாசிரியர்களின் உத்தரவுகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.

              தொடக்க/ பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து பட்டதாரி ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெற்று வந்தனர். பிறகு தமிழக அரசு 17.07.2013 அன்று இவ்வரசாணை தொடர்பான தெளிவுரையில் அரசாணை எண்.18 வழங்கிய நாள் முதல் ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என்று தெளிவுரை வழங்கியது.

           இதனால், கல்வித்தகுதி முடித்த நாள் முதல் ஊக்க ஊதிய வழங்கப்பட்டிருப்பதால், அந்நாள் முதல் அரசாணை வெளியான நாள் வரையிலான தொகையினை திரும்ப செலுத்துமாறு தலைமை ஆசிரியர்கள் பிறபித்த (Recovery) ஆணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இடைக்காலத் தடை பிறபித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 





4 Comments:

  1. what about others who got M.PHIL incentive?

    ReplyDelete
  2. what about others who got M.PHIL incentive?BY jeya

    ReplyDelete
  3. What about recovery?

    ReplyDelete
  4. Please tell me anybody sir/mam which best book for trb zoology exam

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive