இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீத கிருஷ்ணன் கூறியதாவது: இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளிலான மொத்தம் 5,566 பணியிடங்களுக்கு விண்ணப்பித்த 17 லட்சத்து 552 பேரில், 3 லட்சத்து 441 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வை கண்காணிக்க 950 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்காக, மாநிலம் முழுவதும் 244 மையங்களில் 4,755 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 14 லட்சத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை, இத்தேர்வு நடைபெறுகிறது. http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் சென்று ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...