தமிழகம் முழுவதும், நேற்று நடந்த, குரூப்-4 தேர்வை, 2 லட்சம் பேர் எழுதவில்லை. தேர்வுக்கான, கீ-ஆன்சர் இன்றோ அல்லது நாளையோ தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு, நேற்று காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. இத்தேர்வை, தமிழகம் முழுவதும், 244 மையங்களில், 4,764 தேர்வுக் கூடங்களில், 12 லட்சம் பேர் எழுதினர். சென்னையில் மட்டும், 18 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 2 லட்சம் பேர் பங்கேற்கவில்லை.
தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், "கடந்தாண்டு, 2012, ஜூலை 7ம் தேதி நடைபெற்ற, 10,266 இடங்களுக்கான, குரூப்-4 தேர்வை, 10.34 லட்சம் பேர் எழுதினர். ஆனால், நேற்று நடந்த, 5,566 இடங்களுக்கான, குரூப்-4 தேர்வை, 12.21 லட்சம் பேர் எழுதினர். இந்தாண்டு தேர்வு விகிதம் இரு மடங்கு உயர்ந்து உள்ளது. தேர்வுக்கான, "கீ-ஆன்சர்&' இன்றோ அல்லது நாளையோ தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
குரூப்-4 தேர்வு குறித்த விவரங்களை, தேர்வர்களுக்கு, உடனுக்குடன் கொண்டு செல்வதில், செய்தித்தாளும், டிவி மீடியாக்களும் பெரும் பங்காற்றின. அதிலும், தினமலர் நாளிதழின் பங்கு அளப்பரியது. குரூப் - 4 தேர்வின் அனைத்து தகவல்களையும், உடனுக்குடன், தேர்வர்களுக்கு கொண்டு சென்றதில் தினமலர் முக்கிய பங்கு வகித்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...