இந்த ஆண்டு 8 பெண் ஆசிரியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்த ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதுகளை நேரில் வழங்குகிறார். விருதுடன் ரூ.25 ஆயிரம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
இதுதொடர்பாக விருது பெறும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தனித்தனியே மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. விருதுக்கான பட்டியல் மாவட்டவாரியாக தயாரிக்கப்பட்டு, மாநில அரசு மூலம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
அந்தப் பட்டியலில் இருந்து 2012- ஆம் ஆண்டு விருதுக்கான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
விருது பெறும் ஆசிரியர்கள் விவரம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்
1. ஆர்.ராஜராஜேஸ்வரி - தலைமை ஆசிரியர், சென்னை நடுநிலைப் பள்ளி, அண்ணாசாலை, சென்னை.
2. எஸ்.ரங்கநாதன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மலைப்பாளையம், மதுராந்தகம் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்.
3. சி.சேகர் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முப்பதுவெட்டி, வேலூர் மாவட்டம்.
4. ஜி.வி. மனோகரன் - தலைமை ஆசிரியர், சேந்தங்குடி நகராட்சி தொடக்கப் பள்ளி, மயிலாடுதுறை.
5. ஆர்.மாணிக்கம் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நெடுவாக்கோட்டை, மன்னார்குடி.
6. டி.விஜயராணி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, முல்லைக்குடி, பூதலூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
7. வி.துரைராஜன் - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஸ்ரீபுரந்தன், அரியலூர் மாவட்டம்.
8. கே. உஷாதேவி - தென் அரங்கநாதர் நடுநிலைப் பள்ளி, ஸ்ரீரங்கம், திருச்சி.
9. எஸ்.லலிதா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருதூர் சமயபுரம், லால்குடி வட்டம், திருச்சி.
10. டி.தாரகேஸ்வரி - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சிவயம் (மேற்கு), குளித்தலை வட்டம், கரூர் மாவட்டம்.
11. ஆர். செல்வ சரோஜா - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வேம்பார்பட்டி, திண்டுக்கல்.
12. பி. கீதா சரஸ்வதி - தலைமை ஆசிரியர், மங்கையர்கரசி நடுநிலைப் பள்ளி, மதுரை மாவட்டம்.
13. ஆர்.தங்கவேலு - தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, காளிப்பட்டி, திருச்செங்கோடு.
14. எஸ்.ராஜேந்திரன் - பி.ரங்கநாதன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஆதனி, பவானி வட்டம்.
15. பி.ரெங்கநாதன் - தலைமை ஆசிரியர், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி, திசையன்விளை, ராதாபுரம் வட்டம், திருநெல்வேலி.
இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்
1. வி.குருநாதன் - தலைமை ஆசிரியர், முத்தியால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, தம்புச் செட்டித் தெரு, சென்னை.
2. டபிள்யூ. ஜெக செல்வி - ஆசிரியர், அரசு உயர் நிலைப் பள்ளி, பேயன்குழி, கன்னியாகுமரி.
3. ஆர்.ஜெயகுமார் - தலைமை ஆசிரியர், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்திவரம், காஞ்சிபுரம் மாவட்டம்.
4. தங்கம் மூர்த்தி - முதல்வர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாரியம்மன் கோயில் தெரு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை.
5. எச். கல்யாணசுந்தரம் - தலைமை ஆசிரியர், டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி, லட்சுமிபுரம், மதுரை.
6. ஆர்.குழந்தைவேலு - தலைமை ஆசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தொண்டாமுத்தூர், கோவை.
7. எல். லட்சுமணன் - தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, நஞ்சநாடு, நீலகிரி மாவட்டம்.
விருது பெறும் ஆசிரிய சாதனையாளர்கள் அனைவருக்கும் ஆசிரிய சமூகத்தின் சார்பாக அன்பின் வாழ்த்துகள்
ReplyDelete