எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்றுடன் முடிந்தது. மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 19ம் தேதி துவங்குகிறது.
நடப்பு கல்வியாண்டுக்கான, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, ஆக., 5ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடந்தது. நேற்று, தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்., படிப்புக்கான 235 இடங்களும் நிரம்பின.
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில், ஆக.,19ம் தேதி துவங்குகிறது. நடப்பு கல்வியாண்டில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., பி.பி.டி., உள்ளிட்ட, மருத்துவம் சார் பட்டப் படிப்புகளில் சேர, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். அதற்கான தரவரிசைப் பட்டியல், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடு பெறுவோர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், தங்களின் மதிப்பெண் தரவரிசை பட்டியலை, www.tnhealth.org என்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அழைப்புக் கடிதங்களையும் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம். இந்த கலந்தாய்வு, ரேங்க் அடிப்படையில், செப்., 3ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...