கடந்த 14 ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, அரிய செப்பு காசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"இஸ்லாமியர்கள் ஆட்சியை நீக்கி விட்டு, விஜய நகர அரசு, வாணாதிராயர்களிடம், ஆட்சியை ஒப்படைத்தது. மாவலி வாணதிராயர்களின் செப்பு காசுகள், அப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
குமாரகம்பணன் படையெடுப்புக்கு பிறகு, மாவலி வாணாதி ராயர்களின் கல்வெட்டுகளே, பெரும்பாலும் கிடைக்கின்றன. மாவலி ராயர்கள், விஜய நகர வேந்தர்களை போல, வைணவ மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருந்துள்ளனர்.கருட கொடியை தங்களது அரச கொடியாக வைத்திருந்தனர். இம்மன்னர்களில் சிலர் செல்வாக்கு பெற்றவர்களாகவும், சுயாட்சி நடத்துபவர்களாகவும் இருந்துள்ளனர். இவர்கள் காலத்தில் பல வகை செப்பு காசுகளை வெளியிட்டிருக்கின்றனர்.
கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த தமிழ் மன்னர் "சமரகொலாகலன்" காலத்தில் வெளியிட்டு இருக்கலாம், என கருதப்படும் செப்பு காசில், வலது பக்கம் நோக்கி செல்லும் கருடன் உருவத்தின் மேல், குடை அழகாக பொறிக்கப்பட்டுள்ளது. பின்பக்கத்தில், "புவ", "னெக", "வீரன்" என்று மூன்று வரிகளில், தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 2.90 கிராம் ஆகும்.
தற்போது இந்திய அரசு வெளியிடும் நாணயங்களில், இந்தி மற்றும் ஆங்கிலம் எழுத்துகளில் மட்டுமே பெயர் பொறிக்கப்படுகிறது. அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்பட்ட நாணயத்தில் மட்டுமே, அவர் பெயர் தமிழில் உள்ளது. இந்த செப்பு காசு மூலம், 14, 15 ஆம் நூற்றாண்டுகளிலேயே தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட காசுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது நிருபணமாகியுள்ளது." இவ்வாறு கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...