"குரூப்-1 மெயின் தேர்வு, செப். 27, 28, 29 ஆகிய தேதிகளில், சென்னையில் நடக்கும். இத்தேர்வை, 1,391 பேர் எழுத அனுமதிக்கப்படுவர்," என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறினார்.
இத்தேர்வை, 75,627 பேர் எழுதினர். இதன் முடிவு, கடந்த மே 16ல் வெளியிடப்பட்டது. இதில், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், ஒரு பணியிடத்திற்கு 50 பேர் வீதம் 1,391 பேர், மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஒரே, "கட்-ஆப்" மதிப்பெண்களை, அதிக தேர்வர்கள் எடுத்திருப்பதால், ஒரு பதவிக்கு போட்டியிடும் தேர்வர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மெயின் தேர்வு, வரும் செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில், சென்னையில் மட்டும் நடக்கும். தேர்வு மையங்கள் குறித்த விவரம், "ஹால் டிக்கெட்"டுகள் வெளியிடுவது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். மெயின் தேர்வு, "ஜெனரல் ஸ்டடிஸ் - 1, 2, 3" என, மூன்று தாள்களாக நடக்கும்.
அடுத்த வாரம், குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். நகராட்சி கமிஷனர், உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், நேர்முகத் தேர்வு கொண்ட பதவிகளில், 1,059 பணியிடங்களுக்கும், நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்களில், 757 பணியிடங்களுக்கும், தேர்வு அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு, நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
செப்டம்பரில் நடக்க உள்ள மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்களின் பதிவு எண்கள்,www.tnpsc.gov.in என்ற, தேர்வாணைய இணையதளத்தில், நேற்று வெளியிடப்பட்டன. இதில் இடம் பெற்று, ஏற்கனவே, உரிய சான்றிதழ்களை, இணையதளத்தில், "அப்-லோட்" செய்ய வேண்டும் அல்லது பதிவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...