சென்னை மாவட்டம் – திருவல்லிக்கேணி ஓன்றியம் – அரசு நிதி உதவி M.O.P. வைணவ துவக்கப் பள்ளியில் அசத்தல் ---
சென்னை மாவட்டம்
– திருவல்லிக்கேணி ஓன்றியம் – அரசு நிதி உதவி M.O.P. வைணவ
துவக்கப் பள்ளியில் “காலை உணவு திட்டம்” (PROJECT AHAR) துவக்கம். இத்திட்டத்தை பற்றி இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு. க. சாந்தகுமார் அவர்களின்
விரிவான விளக்கம்:
எம் பள்ளியில்
பயிலும் மாணவர்கள் அனைவருமே ஏழை மாணவர்கள், அவர் தம் தந்தையார் அதிகாலை வேளையில் மீன்
பிடிக்க கடலுக்கும், தாயார் வீட்டு வேலைக்கும் செல்வதால் எம் பிள்ளைகள் மதிய சத்துணவு
திட்டத்தையே தம் ஒரு வேளை உணவாக உட்கொண்டு பள்ளியில் பயின்று வந்தனர். இக்குறையை போக்க
எம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி. சே.பங்கஜம் அவர்களின் வழிகாட்டுதலின் படி, எம் பள்ளியில்
உள்ள ஆசிரியர்கள் அவர் தம் இல்ல சுப நிகழ்ச்சியினை (எ.டு. கல்யாண நாள் , பிறந்த நாள்)
எம் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கி பள்ளியிலேயே கொண்டாடினோம்…. இத்திட்டம் முழுமையான
அடைவை தரவில்லை…
இந்நிலையில் எம் பள்ளியின் வளர்ச்சி மற்றும்
மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட சென்னை நுங்கம்பாக்கம் M.O.P. வைணவ மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர். நிர்மலா பிரசாத் அவர்கள்
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் துவங்குவதற்கு ஆகும் அனைத்து செலவுகளையுமே
, கல்லூரியே ஏற்கும் என்று உறுதி அளித்தார்.. இத்திட்டம் பற்றி எம் பள்ளிப் பகுதிக்கு
உட்பட்ட சென்னை மாமன்ற உறுப்பினர் திரு. எம்.ஜி.ஆர். வாசன் (அ.இ.அ.தி.மு.க) அவர்களிடம்
கூறிய போது, இத்திட்டம் சார்ந்த அனைத்து நிகழ்வுகளுக்கும் மாணவர் நலன் கருதி தாம் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்று எம் பள்ளி
ஆசிரியர்களை ஊக்குவித்தார்…
அனைவரது ஒத்துழைப்புடன் எம் பள்ளியில் காலை உணவு
திட்டம் 11.07.2013 முதல் எவ்வித தோய்வும் இன்றி சீரிய முறையில் நடைபெற்று வருகின்றது…. தினமும் காலை 8.00 மணிக்கு - சென்னை நுங்கம்பாக்கம்
M.O.P. வைணவ மகளிர் கல்லூரி மாணவிகள் எம் பள்ளி
மாணவர்களுக்கு உணவினை பரிமாரி பின் அரை மணி நேரம் (SPOKEN ENGLISH) ஆங்கிலம்
கற்பிக்கின்றனர்.
உணவு வகைகள்:
திங்கள் :
இட்லி, சாம்பார்
செவ்வாய் : பொங்கல்,
சாம்பார்
புதன் :
இடியாப்பம், வடைகரி
வியாழன் : பூரி
, குறுமா
வெள்ளி :
கிச்சடி (அல்லது) பிரட் சான்விஜ்….
நன்றி…… நன்றி……
நன்றி…….
Surely
ReplyDeletegod will give you reward