பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு போதிய
ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்மென
வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் நடுநிலைப்
பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு
ஆண்டுக்குள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளி பூதலாபுரம் அரசு
மேல்நிலை பள்ளியாகும்.
20 ஆசிரியர் பணியிடங்களுக்கு 9 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இந்த ஆண்டு மேல்நிலைப் பள்ளிக்கான முதுகலை பிரிவு தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வரலாறு, பொருளியல், கணக்கு பதிவியல், வணிகவியல், உடற்கல்வி ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் 14க்கு மேல் காலி பணியிடமாக உள்ளது.
ஜூலை 25 தேதி முதல் மாணவர்களுக்கு இடை நிலை தேர்வு துவங்குகிறது. ஆசிரியர்கள் இல்லாமல் தேர்வை சந்திக்க மாணவர்கள் தயங்குகின்றனர். எனவே அரசு உடனடியாக பூதலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு போதிய ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமித்தும் குடிநீர் வசதி செய்து தர வேண்டுமென ம.தி.மு.க மாநில விவசாய அணி துணை செயலாளர் வரதராஜன் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...