தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக, உதவி
பேராசிரியர் நியமனம் குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பு திரும்ப
பெறப்பட்டது. உதவி பேராசிரியர் நியமனம் குறித்து நேற்று வெளியிட்ட
அறிவிப்பில், பி.எச்டி., குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை.
அவர்களின் பணி அனுபவம் எவ்வாறு எடுத்து கொள்ளப்படும் என்பது குறித்தும்
தெரிவிக்கப்படவில்லை.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,093 உதவி பேராசிரியர் பணியிடம், டி.ஆர்.பி., மூலம், நிரப்பப்பட உள்ளன. தகுதி அடிப்படையில், நடக்கும் இத்தேர்வுக்கு, அரசு நிர்ணயித்துள்ள மதிப்பெண், 34. இந்த மதிப்பெண்ணில், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15; முதுகலை பட்டத்துடன், "நெட், ஸ்லெட்" தேர்வில், ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால், மூன்று மதிப்பெண்; எம்.பில்., பட்டத்துடன், "நெட்" அல்லது, "ஸ்லெட்" தேர்ச்சி பெற்றிருந்தால், ஆறு மதிப்பெண்; பி.எச்டி., பட்டத்துக்கு, ஒன்பது மதிப்பெண், இத்துடன், "நெட்" அல்லது, "ஸ்லெட்&' தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதலாக, மூன்று மதிபெண்ணும் அளிக்கப்படும். இதுதவிர, நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், உதவி பேராசிரியர் தேர்வு மதிப்பெண் முறையில் மாற்றம் செய்து, ஜூன், 19ம் தேதி, டி.ஆர்.பி., புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், "ஆசிரியரின் பணி அனுபவம் என்பது, "நெட், ஸ்லெட்" அல்லது பி.எச்டி., தகுதி பெற்ற நாளிலிருந்து, ஆசிரியராகப் பணியாற்றுவதே, கணக்கில் எடுத்து கொள்ளப்படும்" என கூறியிருந்தது.
டி.ஆர்.பி.,யின் இந்த அறிவிப்புக்கு, பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. புதிய முறையை கைவிட வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து, தினமலர் நாளிதழிலும், "பணி அனுபவ கணக்கீட்டுக்கு புதிய முறை அறிவிப்பு: "ஸ்லெட், நெட்" முடிக்காதவர்களுக்கு வேலை கேள்விக்குறி" என்ற தலைப்பில், கடந்த மாதம், 23ம் தேதி விரிவான செய்தி வெளியானது.
இந்நிலையில், உதவி பேராசிரியர் நியமனம் குறித்த, ஜூன், 19ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை திருத்தி, ஜூலை, 9ம் தேதி(நேற்று) புதிய அறிவிப்பை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டுள்ளது. அதில், "ஆசிரியர் பணி அனுபவம், "நெட், ஸ்லெட்" தகுதி பெற்ற நாளிலிருந்து எடுத்து கொள்ளப்படும் என்பது திரும்ப பெறப்படுகிறது" என குறிப்பிட்டுள்ளது.
மேலும், முழு நேரமாக, பட்டம், பட்டயம் மற்றும் ஆய்வு படிப்பை மேற்கொள்ளும் காலத்தில் ஆசிரியர் அனுபவம் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் நியமனம் குறித்து நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பி.எச்டி., குறித்து எந்தவித தகவலும் வெளியிடவில்லை. அவர்களின் பணி அனுபவம் எவ்வாறு எடுத்து கொள்ளப்படும் என்பது குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து டி.ஆர்.பி., துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்கலைக் கழக மானியக் குழு விதிமுறைகளின் படி ஆசிரியர் நியமனம் நடத்தப்படுகிறது" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...