2013-14ம் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங் -களுக்கு 18,20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழகம் சார்பில் அதன் மாநில செய்தி தொடர்பாளர் திரு. செந்தில் தெரிவிக்கையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி 2013-14ஆம் கல்வியாண்டில் 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.
நிலை உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 100 தலைமையாசிரியர் பணியிடங்கள் மற்றும் 900 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள என மொத்தம் 1000 பணியிடங்கள் தோற்றுவித்து ஆணை வெளியிடப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 18.07.2013 அன்று தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வும், 20.07.2013 அன்று முதுகலை ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு (மாவட்டத்திற்குள்), 22.07.2013 அன்று முதுகலை ஆசிரியர் (மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்கள் இக்கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது என்றும், இதுகுறித்து முறையான உத்தரவு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இன்று அனுப்பப்படும் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...