Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தலை சிறந்த மாணவராக வேண்டுமா?



                பள்ளியிலோ, கல்லூரியிலோ தலை சிறந்த மாணவராக இருப்பது பெரிய மந்திர வித்தையல்ல. அர்ப்பணிப்பு உணர்வுடன், சில பயிற்சிகளை மேற்கொண்டாலே போதும், நீங்களும் தலை சிறந்த மாணவர் தான். இதோ அந்த ரகசியங்கள்:
 
* புத்தக புழுவாக இல்லாமல், பல்வேறு அறிவுசார் விஷயங்களை, மாணவர்கள் தெரிந்து கொள்ள முற்பட வேண்டும்.

* வெறும் மதிப்பெண்கள் மட்டும் வாழ்க்கைக்கு உதவாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

* இன்றைய போட்டிநிறைந்த உலகில் பேச்சு திறன், கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், போன்ற கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

* எதிர்கால லட்சியத்தில் தெளிவாக இருக்க வேண்டும். இலக்கை அடைய சுணக்கமின்றி செயல்படுவதோடு, தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

* நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றுவதோடு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை கேட்டு நடப்பது, இலட்சியத்தில் வெற்றி காண உதவும்.

* பாடப்புத்தகங்கள் தவிர்த்து, இதர அறிவுசார் புத்தகங்களை படிப்பது, பன்முக சிந்தனையை வளர்த்துக்கொள்ள உதவும்.

* எந்த சூழ்நிலையிலும் நாட்டுநலனுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக் கூடாது என்பதில் மாணவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

* நாட்டு நலன் சார்ந்த சேவைகளில், மாணவர்கள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். பள்ளி பருவத்திலேயே தேசிய மாணவர் படை, சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளில் இணைந்து செயல்படலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive