தமிழ்நாடு மேல் நிலைப்பள்ளி / உயர்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியர்களின் மாவட்டக் கல்வி அரலுவலர் பதவி உயர்வு தொடர்பான
நடைமுறைகளை ஆராய குழு அமைத்து ஆணை வெளியிடப்பட்டது .
அரசாணை(1டி)எண் 57 அது
தொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வு குறித்த சீராய்வு குழுவிடம்
(குழு தலைவர் / உறுப்பினர் செயலர் / உறுப்பினர்களிடம்) பதவி உயர்வு பெற்ற
பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் 03.07.2013 அன்று
பள்ளிக் கல்வி இயக்ககம் தமிழ்நாடு பாடநூல் கழகம் கூட்ட அரங்கில் நடந்த
பேச்சுவார்த்தை காலை 11.30 முதல் 1.15 வரை நடைப்பெற்றது.
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும்
தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் சிறப்புத் தலைவர் திரு ஆ.வ . அண்ணாமலை,
கௌரவத் தலைவர் திரு பொன். ஜீனக்குமார், மாநிலத் தலைவர் திரு.சின்னசாமி ,
மாநில செய்தித் தொடர்பாளர் திரு சி.செந்தில், மாநில மகளிர் அணித் தலைவி
திருமதி.மணிமேகலை, மைய மண்டல தலைவர் திரு.மாதப்பன், தலைமை நிலையச் செயலாளர்
திரு.மயில்வாகணன், செயற்குழு உறுப்பினர் திரு .கௌரிசங்கர் ஆகியோர் பேச்சு
வார்த்தையில் கலந்துக்கொண்டனர்.
பேச்சு வார்த்தையின் போது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் எடுத்துக்கூறப்பட்ட கருத்து: 6 முதல் 10 வகுப்புகளை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் 6 முதல் 10 வகுப்புகளை நிர்வகிக்கும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 75 சதவீதம் பணியிடங்கள் பதவி உயர்வின் மூலம் வழங்கப்பட்டது. இம்மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் பதவி உயர்வுக்கெனவே அமையப் பெற்ற பணியிடங்கள் ஆகும் . ஆகவே, பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் சார்பில் ஏற்கனவே வழங்கி வந்த 75 சதவீதம் மாவட்டக் கல்வி அலுவலர் பதவி உயர்வுகளை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து வழங்கவேண்டும் என்றும், மேல்நிலை வகுப்புகளை(11 மற்றும் 12 ம் வகுப்பு ) ஆய்வு செய்யவும் மேற்பார்வையிடவும் மாவட்டக் கல்வி அலுவலர் (மேல்நிலைக் கல்வி) என்ற பதவிகளை உருவாக்கி அப்பணியிடங்களில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை கல்வி மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் நியமனம் செய்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று 25 ப்க்கங்கள் கொண்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டது,

Good. Right approach.Welcome
ReplyDelete