'மாணவர்களுக்கு பாடத்தோடு, மொழி, பண்பாட்டையும் ஆசிரியர்கள் கற்று தர வேண்டும்" என எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் பேசினார்.
தமிழகத்தில் மாணவர்களுக்காக ஊடகங்கள், நாளிதழ்கள் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. ஆனால், அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் வித்திட்டது, தினமலர் நாளிதழ் தான். தமிழகத்தில் அமைதியான முறையில் கல்விப் புரட்சியை, தினமலர் நடத்தி கொண்டிருக்கிறது.
மாணவர்களிடம் மன அழுத்தம் காணப்படுகிறது. கல்வியாளர்கள் ஆராய்ச்சி செய்து, சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். அந்த திட்டத்திற்கு ஒரு பக்கம் வரவேற்பும், மற்றொரு பக்கம் எதிர்ப்பும் இருக்கிறது.
மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் படிக்க வேண்டும் என்பதற்காக, &'சங்கமம்&' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.
விவாத மேடையில், ஆசிரியர்கள் சார்பில், தாயுமானவன், ஆனந்தன், கலைச்செல்வி, குருபிரபு, லட்சுமிபதி, லுாயிஸ், பாலகிருஷ்ணன், பெற்றோர் சார்பில், கோபால், அம்பிகா, குமரேசன், கீர்த்திவாசன், நாகராஜன், சண்முகசுந்தரம், மாணவர்கள் சார்பில், பாலாஜி, சுவாதி, சித்ரா, பவித்ரா, அர்ச்சனா, சண்முகசுந்தரம், சரணவன் உட்பட, 21 பேர் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கு என்ன காரணம்? குழந்தைகளுக்கு அடிப்படை சட்ட உரிமை வழங்கப்படுகிறதா? மாணவர்களுக்கு நவீன தொழில் நுட்ப சாதனங்களை வாங்கி கொடுப்பதாலும், கைச்செலவுக்கு பணம் வழங்குவதாலும் அவர்களின் படிப்பு பாதிக்கப்படுமா?
மனப்பாடம் செய்வதால், மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி பாதிக்குமா? உள்ளிட்ட, பல்வேறு கேள்விக் கணைகள், விவாத மேடையில் தொடுக்கப்பட்டன. அதற்கு, ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களும் உடனுக்குடன் தங்கள் பதில்களை பதிவு செய்து, விவாத மேடையை, பயனுள்ள கருத்துகளை வெளிப்படுத்தும் களமாக மாற்றினர்.
கெடுக்கும் சமூக வலைதளங்கள்: விவாத மேடையின் நடுவர், மனுஷ்யபுத்திரன் பேசியதாவது: ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து விட்டது. பெற்றோர், தங்கள் குழந்தைகளை பணம் சம்பாதிக்கும் இயந்திரமாகவும், பந்தயத்தில் ஓடும் குதிரைகளாகவும் கருதுகின்றனர்.
"வீடியோ கேம்ஸ்" போன்ற கேளிக்கைகளும், சமூக வலைதளங்களும், குழந்தைகளை பாதிக்கின்றன. மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதால், மட்டும் ஆளுமை வளர்ச்சியை அடைந்து விட முடியாது. விளையாட்டு துறையில் மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
பாடங்களை சரியாக நடத்தாத, திறமை இல்லாத ஆசிரியர்களை தான் மாணவர்கள் வெறுப்பர். மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாகுபாடு காட்டக் கூடாது. மாணவர்களை அடிக்க கூடாது. மாணவர்களுக்கு பாடத்தை கற்பிப்பதோடு, மொழி, பண்பாட்டையும் கற்பிக்க வேண்டும். மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெற்றோர், ஆசிரியர்கள், சமூகம் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
உளவியல் நிபுணர் கிர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் கூறியதாவது: ஸ்கூல் என்ற வார்த்தைக்கு, வாழ்க்கையை முழுமையாக வரைமுறைப்படுத்த, சமுதாயம் ஏற்படுத்தி தரும் கூடம் என்ற பொருள் உண்டு.
ஆசிரியர்கள் சரியாக பாடம் கற்று தரவில்லை என்ற குறைகளை மாணவர்கள் சொல்லக் கூடாது. கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மாணவர்களுக்குள் உருவாக வேண்டும். பிறரிடம் அன்பு, பாசத்தை வெளிப்படுத்தி மாணவர்கள் பழக வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
விவாத மேடையில் பங்கேற்று, வெளியே வந்த மாணவ, மாணவியர் தெரிவித்த கருத்துக்கள்:
பவானி, கிழக்கு தாம்பரம், அரசு மகளிர் மேல்நிலை பள்ளி: தினமலர் நாளிதழ் நடத்திய சங்கமம் நிகழ்ச்சி மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துக்கள், எங்கள் மனதில் பசுமரத்தில் அடித்த ஆணி போல் பதிந்து விட்டது. அவர்களின் அறிவுரையை ஏற்று, நாங்கள் பாடங்களை கவனமாக படிப்போம்.
ஆதித்தியா, ஆசான் மெமோரியல் பள்ளி: இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு தெரியாத பல முக்கிய தகவல்களை தெரிந்து கொண்டேன். ஆசிரியர்களுக்கு என்னென்ன கஷ்டங்கள் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். பெற்றோர் தரும் கைச்செலவுக்கான பணத்தை வீணாக செலவு செயமாட்டேன்.
விக்னேஷ், இந்து மேல்நிலை பள்ளி: சங்கமம் நிகழ்ச்சி நல்ல பயனுள்ளதாக அமைந்தது. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். பெற்றோரும், ஆசிரியர்களும் பாராட்டும் வகையில், நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
மனோஜ் குமார், மோதிலால் பள்ளி: ஆசிரியர்களிடம் மாணவர்கள் நட்பாக பழக வேண்டும். எந்த ஒரு நல்ல செயலையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தீபலட்சுமி, எஸ்.எம்.ஜே.வி., பள்ளி: யதார்த்தமாகவும், வெளிப்படையாகவும் நடந்த கலந்துரையாடல் கூட்டம் மாணவ, மாணவியருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உடற்பயிற்சி அவசியம் என்பதை புரிந்து கொண்டேன். மன அழுத்தம் குறைந்ததாக உணருகிறேன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...