பார்வையற்றோருக்கான உலகின் முதல் பொறியியல்
கல்லூரிக்கான இடத்தை தேர்வு செய்வதில் இன்னும் இழுபறி நிலவுவதால், அந்த
முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் அமைவதில், பெரும் தேக்கம்
ஏற்பட்டுள்ளது.
அத்தகையதொரு பொறியியல் கல்லூரிக்கான மென்பொருள் மற்றும் பாடத்திட்டங்கள் அனைத்தும் தயாராக இருந்தும், இடம் மட்டும் இன்னும் தேர்வாகவில்லை. இதனால், அதன்மூலம் பயன்பெறக்கூடிய மாணவர்கள் வீணாக காத்திருக்கிறார்கள்.
தேவ்நார் பவுண்டேஷனால் ஏற்படுத்தப்படும் அந்த பொறியியல் கல்லூரிக்கான "ப்ளூபிரின்ட்", பிட்ஸ்-பிலானி கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்டது. முதற்கட்ட நிதி ஏற்பாடுகள் தயாராக உள்ளன.
ஆந்திராவில் மட்டும், 10 வயதுக்கு குறைந்த 10,000 பார்வையற்ற குழந்தைகள் உள்ளனர். இவர்களில், வெறும் 2,000 குழந்தைகள் வரைதான் சிறப்பு பள்ளிகளுக்கு செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
இந்த தேவ்நார் பவுண்டேஷன் பார்வையற்றோர் பள்ளியைச் சேர்ந்த 8 மாணவர்கள், இதுவரை, சாதாரண பொறியியல் கல்லூரிகளின் மூலம், தங்களின் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளனர். அவர்களில் ஒருவர், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மேற்படிப்பை மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த பவுண்டேஷன் வட்டாரங்கள் கூறியதாவது: எங்களுக்கு 2 முதல் 3 ஏக்கர் நிலம்தான் தேவை. அதற்கான நிதியுதவியை செய்ய எங்களுக்கான நன்கொடையாளர்கள் இருக்கிறார்கள் மற்றும் கல்லூரிக்கான ஆசிரியரும் இருக்கிறார். இந்த விபரங்களை நாங்கள் அரசிடம் தெரிவித்துள்ளோம் என்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...