அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்களின்
கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.
அரூரில் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை
மற்றும் அறிவியல் கல்லூரியை கடந்த, 2011ம் ஆண்டு சென்னையில் இருந்து வீடியோ
கான்ஃபரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இக்கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்.சி., தாவரவியல், கணிப்பொறியியல் என நான்கு பாடப்பிரிவுகள் உள்ளன. கல்லூரிக்கு கட்டிட வசதி இல்லாததால் தற்சமயம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.
கல்லூரி துவங்கி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாமாண்டு மாணவர் சேர்க்கை தற்போது, நடக்கிறது. முதலாமாண்டில், 200 மாணவ, மாணவியர்களும், இரண்டாமாண்டில், 220 மாணவ, மாணவிகளும் என மொத்தம், 420க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
இவர்கள கல்வி பயில போதிய வகுப்பறைகள் இல்லாத சூழ்நிலையில் தற்சமயம் புதிதாக மூன்றாமாண்டு சேர்க்கையில் கல்லூரியில் சேரும், 220க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வகுப்பறைகள் இல்லாத நிலை உள்ளது.
அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு அரசு எட்டு கோடி ரூபாய் நிதியை கடந்த ஒன்னரை ஆண்டுக்கு முன்பே ஒதுக்கீடு செய்துள்ளது. கல்லூரி கட்டிடம் கட்ட அரூர் - மொரப்பூர் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
கல்லூரி கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் பெங்களூரிலிருந்து இந்திய கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் கே.எப்.ரெட்டி என்பவர் தலைமையிலான வனத்துறையினர் அவ்விடத்தை இரண்டு முறை பார்வையிட்டு கல்லூரிக்கு இடம் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
ஆனால், இன்றும் அவ்விடத்தில் கல்லூரி கட்ட வனத்துறையினர் அனுமதி தராமல் காலம் தாழ்த்தி வருவதால் கட்டிடப்பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தற்போது, தற்காலிகமாக கல்லூரி செயல்பட்டு வரும் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் குறிப்பாக மாணவிபகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அரூர் அரசு கலைக்கல்லூரியில் செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் பாடபிரிவு மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில், 10 லட்சம் மதிப்புள்ள கணிப்பொறிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
ஆனால், கம்ப்யூட்டர் ஆய்வக வசதி இல்லாததால் அவற்றை கல்லூரிக்கு கொண்டு வந்து வைக்க முடியவில்லை. இதனால், கம்ப்யூட்டர் பாடபிரிவு மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
"மாணவ, மாணவிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உடனடியாக கட்டிடம் கட்ட வேண்டும்" என, மாணவ, மாணவியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...