தமிழகம் முழுவதும் உள்ள
பொறியியல் கல்லூரிகளில்
நடத்தப்படும் பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான
புதிய பாடத்
திட்டத்தை
உறுப்புக் கல்லூரிகள் மற்றும்
தமிழகம் முழுவதும்
உள்ள 500-க்கும்
மேற்பட்ட இணைப்பு
பொறியியல் கல்லூரிகளுக்கான
பாடத் திட்டத்தை
சென்னை அண்ணா
பல்கலைக்கழகம் தயாரித்து வழங்கி வருகிறது.
பல்கலைக்கழக விதியின்படி, பாடத்
திட்டங்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்பட்டு
வழங்கப்பட வேண்டும்.
தொழில்நுட்ப வளர்ச்சி, சமூகத் தேவையில் மாற்றம்
ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்களின் நலனைக் கருத்தில்
கொண்டு இந்த
பாடத் திட்டம்
மாற்றம் செய்யப்படுகிறது.
இதற்கு முன்னர், இணைப்புக்
கல்லூரி பி.இ. படிப்புகளுக்கு
2008-ஆம் ஆண்டு
தயாரிக்கப்பட்ட பாடத் திட்டம் நடைமுறையில் இருந்தது.
இந்த பாடத் திட்டத்தை
மாற்றி கடந்த
2012-13 கல்வியாண்டிலேயே புதிய பாடத்
திட்டம் அறிமுகம்
செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் ஓராண்டு கால
தாமதமாக இப்போது
புதிய பாடத்
திட்டத்தை அண்ணா
பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. முதல்கட்டமாக பி.இ. முதல்
மற்றும் இரண்டாம்
பருவங்களுக்கு இந்த புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளன.
வரும் ஆகஸ்ட் 1-ஆம்
தேதி கல்லூரியில்
பி.இ.
முதலாம் ஆண்டு
சேரும் மாணவர்கள்
இந்த புதிய
பாடத் திட்டங்களைத்தான்
படிக்க வேண்டும்.
இந்த புதிய பாடத்
திட்டத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக கம்ப்யூட்டர்
சயின்ஸ் துறையில்
"தியரி' (தத்துவப் பாடங்கள்) வெகுவாகக் குறைக்கப்பட்டு,
செய்முறை (புரோகிராம்)
பாடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுபோல் மெக்கானிக்கல்,
எலெக்ட்ரிக்கல் ஆகியவை உள்ளிட்ட பிற துறை
பாடங்களிலும், நவீன வளர்ச்சிக்கேற்ப மாணவர்களின் திறனை
மேம்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என பல்கலைக்கழக கல்விக் குழு
அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே சமயம் எம்.இ., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு
2009-ஆம் ஆண்டு
தயாரிக்கப்பட்ட பாடத் திட்டமே நடைமுறையில் உள்ளது.
இதுகுறித்து சென்னை அண்ணா
பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராஜாராம் கூறியது:
நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு
ஏற்ற வகையில்
பொறியியல் மாணவர்களைத்
தயார் செய்ய
வேண்டும் என்பதற்காகவே
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத் திட்டம்
மாற்றியமைக்கப்படுகின்றது.
இதுபோல், இணைப்பு கல்லூரி
இளநிலை பொறியியல்
படிப்புகளுக்கான புதிய பாடத் திட்டம் இப்போது
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 15, 25 ஆகிய
தேதிகளில் பல்கலைக்கழகத்தில்
நடத்தப்பட்ட கல்விக் குழுவின் 18-ஆவது கூட்டத்தில்
இந்த புதிய
பாடத் திட்டத்துக்கு
அனுமதி வழங்கப்பட்டது.
எட்டு துறைகளைச்
சேர்ந்த பேராசிரியர்கள்
உள்பட 270 உறுப்பினர்கள்
இந்த கூட்டத்தில்
பங்கேற்றனர்.
தமிழ் வழியில் படித்து
வரும் மாணவர்கள்
ஆங்கிலத்தில் புலமை பெறும் வகையில், பாடத்
திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கணிதம்,
இயற்பியல், வேதியியல் மற்றும் நவீன பொறியியல்
நுட்பங்களை மாணவர்கள் தெளிவாக அறியும் வகையிலும்,
சிறப்பாக கையாளக்
கூடிய வகையிலும்
பாடத் திட்டத்தில்
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வேலைவாய்ப்புத்
திறனை மேம்படுத்தும்
வகையிலும் மாற்றங்கள்
இடம்பெற்றுள்ளன.
இதுபோல் எம்.இ.,
எம்.டெக்.,
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கு புதிய
பாடத் திட்டத்தை
தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...