தொழிற்கல்வியைப் பொறுத்தவரை, நிர்வாக
ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்கள் கல்விக்கடன் பெற்றால்,
அவர்களுக்கும் வட்டிமானியம் வழங்கப்படுகிறது.
அரசு, கலந்தாய்வு மூலம்,
பொறியியல் மற்றும் தொழிற்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு, 4 லட்ச ரூபாய்
வரையான கல்விக்கடனுக்கு, மூன்றாம் நபர் ஜாமின், சொத்துப் பிணையம்
தேவையில்லை.
நான்கு லட்ச ரூபாய் முதல், ஏழு லட்ச ரூபாய்
வரையான கடனுக்கு, மூன்றாம் நபர் ஜாமீன், பத்து லட்ச ரூபாய் வரையான
கடனுக்கு, சொத்துப் பிணையம் தேவை. இந்திய வங்கிகள் சங்கத்தின் -ஐ.பி.ஏ.,
திருத்தப்பட்ட விதிமுறைகளின் கீழ், நிர்வாக இட ஒதுக்கீட்டிற்கும், இச்சலுகை
பொருந்தும்.
இவர்களுக்கும், நான்கு லட்ச ரூபாய் வரையான கல்விக்கடனுக்கு, மூன்றாம் நபர் ஜாமின், சொத்துப்பிணையம் தர வேண்டியதில்லை. பெற்றோர் வருமானம், ஆண்டுக்கு, நாலரை லட்ச ரூபாயாக இருந்தால், வட்டி மானியம் உண்டு.
படிக்கும் காலம் வரையும், முடித்த பின், வேலை கிடைத்த ஆறு மாதம் அல்லது ஓராண்டு வரையும், வட்டி மானியம் தொடரும். உள்நாட்டில் படிப்புவர்களுக்கு தான், இச்சலுகைகள் வழங்கப்படும். நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கு, வட்டி சலுகை உண்டு.
சில வங்கிகளில் ,60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே வட்டி மானியம் வழங்குகின்றனர். இது, வங்கிகளை பொறுத்து மாறுபடுகிறது. கல்விக் கடன் பெறுவதற்கு, வங்கி மேலாளரின் அனுமதி கடிதம் தேவை.
அனுமதி கடிதத்தில் படிப்பு, கட்டணம், கடன்தொகை, வட்டி மானியம், கடனை திருப்பி செலுத்தும் காலம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். மேலாளர் அனுமதி கடிதம் தர மறுத்தால், கடன் தர முடியாது என்பதற்கான, "நிராகரிப்பு கடிதத்தை" பெற வேண்டும். அதைக் கொண்டு, வங்கி உயரதிகாரிகளை அணுகலாம்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...