உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க, வரும், 26ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில்,
1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு,
கடந்த, 2011ல் அறிவிக்கப்பட்டது. இரு ஆண்டுகளாக இழுபறி நிலையில் இருந்து,
மூன்றாவது ஆண்டில், நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஜூன் 19ம் தேதியில்
இருந்து, கடைசி நாளான நேற்று வரை, 32 மையங்களில், விண்ணப்பங்கள்
வழங்கப்பட்டன. இதுவரை, 5,000த்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகக்
கூறப்படுகிறது.
இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, வரும், 26ம் தேதி வரை
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் நேற்று
தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...