சட்டப் பல்கலைக்கழக இணைய தளம் திடீரென முடங்கியதால், "கட்-ஆப்"
மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள முடியாமல், மாணவர்கள் பரிதவித்தனர்.
இதையடுத்து, தங்களின், "கட்-ஆப்" மதிப்பெண் விவரங்களை தெரிந்து கொள்ள,
மாணவர்கள் இணைய தளத்தை தொடர்பு கொண்டனர். இருந்தும் நேற்று இரவு வரை,
பல்கலைக்கழக இணைய தளம் முடங்கியே இருந்தது. இதனால் மாணவர்கள் பரிதவித்தனர்.
இதுகுறித்து, மாணவி ஒருவர் கூறுகையில், "நான் பிளஸ் 2வில், 786
மதிப்பெண் பெற்று, ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளேன்.
இதுவரை, எனக்கு அழைப்பு கடிதமும் கிடைக்கவில்லை. இடம் கிடைக்குமா என்பதை,
இணைய தளம் மூலமும் அறிய முடியவில்லை" என்றார்.
இதுகுறித்து, சட்ட பல்கலைக்கழகத்தினர் கூறுகையில், "இணையதளத்தில்
சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. விரைவில், இணைய தளம் பயன்பாட்டிற்கு
வரும்" என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...