பள்ளிகளில் விவசாயம், நெசவு,மரவேலை தொடர்பான
பாட ஆசிரியர்கள் நியமனத்தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு தொழிற்கல்வி
ஆசிரியர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில்
கூறியிருப்பதாவது: டி.டி.சி.,பயிற்சி வகுப்பு 1980ம் ஆண்டிற்கு முன்பு வரை
தமிழகத்தில் சுமார் 8 மையங்களில் நடந்தது. அனைத்து மையங்களிலும் விவசாயம்,
நெசவு,மரவேலை, தையல், ஓவியம்,இசை என ஒரு வகுப்பிற்கு 30 மாணவ, மாணவிகள்
படித்தனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பிரிவுகள் இருந்தது.
முறையாக பயிற்சி வகுப்புகள் நடந்து வந்த போது, ஒரு பாடத்திற்கு ஒரு மையம்
என்ற முறையில் அரசு நடத்தியது. இதனால் குழப்பமான ‹ழ்நிலை இருந்தது.இந்த
ஆண்டு டி.டி.சி.,பயிற்சி நடத்தும் போது, முன்பு போலவே நடத்தினால் சிறப்பாக
இருக்கும்.
அதாவது மையத்தில் பல பாடங்கள் 2 மாவட்டத்திற்கு ஒரு மையம்
என்றால் பயிற்சி பெறுவதற்கு பயனாக இருக்கும். டி.டி.சி.,பயிற்சிக்கு
எஸ்.எஸ்.எல்.சி.,தேர்ச்சிபெற்றவர்களுக்கு தான் முதலில் வாய்ப்பு கொடுக்க
வேண்டும். திடீரென டி.டி.சி.,படிப்புக்கு பிளஸ் 2 என்றால் எப்படி. எனவே
தயவு செய்து எஸ்.எஸ்.எல்.சி.,தேறியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
இவர்கள் களவேலை செய்து கற்பிக்கிறார்கள். மேலும் விவசாயம், நெசவு,மரவேலை,
பாட ஆசிரியர் நியமனத்தடையை நீக்கி அவர்களை புதிதாக நியமனம் செய்வதுடன்,
டி.டி.சி.,பயிற்சியும் நடத்த வேண்டும். மேலும் தங்களால் நியமனம்
செய்யப்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களை முழுநேர ஊழியராக்கி அவர்கள்
வாழ்வில் ஒளியேற்ற வேண்டுகிறோம். இவ்வாறு அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...