Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

“அரசாங்க பள்ளிகளை அரங்கேற்ற அரசாங்கமே ஆணை பிறப்பிக்க வேண்டும்” - என் வாழ்க்கை


          அரசாங்க பள்ளிகளின் அழிவிற்கு காரணம் என்ன? மற்றும் தனியார் பள்ளிகளின் ஆக்கத்திற்கு காரணம் என்ன?
          
         உங்கள் பதில் “கல்வியின் தரம் “ என்றால் அது நிச்சயம் இல்லை.

      தனியார் பள்ளிகளை பெரும்பாலோனோர் தேடிபோவதற்கு காரணம் கல்வியின் தரம் மட்டும் அல்ல,இன்னொரு முக்கிய காரணம் “பாதுகாப்பு” .அப்படியென்றால் அரசாங்க பள்ளிகளில் பாதுகாப்பு இல்லையா எனக் கேள்வி எழுகிறதா?

      தினந்தோறும் காலை ஏழரை மணிக்கெல்லாம் பலருக்கும் ஏழரை பிடித்துவிடுகிறது .போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொள்ளும்போது என்ன அவசரம்?சங்குகள் கூட சற்று நேரத்தில் முழங்க்கியதும் நின்று  விடும் .அனால் இந்த அலாரம் மணிச்சத்தம் மட்டும் இடைவெளி இல்லாமல் ஒலித்து செவியையே செவிடாக்கி விடும் போல . . . .
 
      இதற்க்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால் சாய்ந்த நிலையில் சென்று கொண்டிருக்கும் பேருந்து அதனை பின் தொடர்ந்து வரும் வாகனங்களுக்கு ட்ராபிக் ஜாம் ஏற்படுத்துவதே.

      பேருந்தின் கனம் தாங்காத பயணிகளின் கூட்டம் ஒரு பக்கம் அது மட்டுமா? பள்ளி மாணவர்களின் படிக்கட்டு அட்டகாசங்கள் மறு பக்கம், ஜன்னல் கம்பிகளை பிடித்து அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருக்கும் மாணவர்களின் குரங்கு சேட்டைகளை காணும் போது காசு கொடுக்காமலே இலவசமாக சர்கஸ் காட்சி பார்ப்பது போல் உள்ளது.

      இந்த இளம் சிறார்களின் நிலையை காணும் போது பேருந்தில் நிம்மதியாக பயணம் செய்ய முடிவதில்லை .மாணவர்களின் நிலையை கண்டு மனம் அல்லல் படுகிறது.
      
எத்தனை முறை படிக்கட்டு பயணங்களால் பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.வாழ்கை வாழ்வதற்குள் முடிந்து விடும் பள்ளி மாணவர்களின் செய்தியை கேக்கும் போது நெஞ்சமே ஒரு நிமிடம் நின்று விடுகிறது.

      ஒரு புறம புத்தகப்பையை பிடிப்பதை விட்டு விட்டு ஜன்னல் கம்பிகளை கட்டிப்பிடித்துக்கொண்டு பயணம் செய்கின்றனர் பள்ளி மாணவர்கள் .மறுபுறமோ வீட்டு வாசலில் வந்து தனியார் பள்ளி பேருந்துகள் மாணவர்களை அழைத்து செல்லும் காட்சியையும் பார்க்க முடிகிறது.

      இரண்டு பேருந்துகளையும் ஒரே சாலையில் பார்க்கும் போது பெற்றோர்களின் கருத்து எப்படி இருக்கும்? நிச்சயம் பாதுகாப்பையே பெரிதென நினைக்கும் ஏழை பெற்றோர்களும் தனது குழந்தையை கடன் வாங்கியாவது தனியார் பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துகுள் அடைக்கப்படுகிறார்கள் .மிதி வண்டியை அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கி வரும் அரசாங்கம் ஏன்! பிறர் மிதி அடிகளில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் நிலையைமட்டும் கருத்தில் கொள்ள வில்லை?
     
 எத்தனையோ திட்டங்களையோ வகுத்துள்ள அரசாங்கம், அரசாங்க பள்ளிகளுக்கென “அரசு பள்ளி பேருந்துகளை“ ஏற்படுத்தி கொடுத்தால் மாணவர்களும் பாதுகாக்கபடுவர் மற்றும் அரசாங்க பள்ளிகளின் நிலையும் மேன்மையுறும் .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive