வேதியியலின் முக்கிய ஒரு உட்பிரிவாக விளங்குவது
ஆய்வக வேதியியல். இதன் மூலம் இயற்கையிலிருக்கும் வேதிப்பொருட்களை
ஆராய்ந்து, அதிலிருந்து தேவையான பொருட்களை பெற முடிவது இதன் சிறப்பு.
உலக
வெப்பமயமாதல், இயற்கை சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவற்றை,
வேதியியல் ஆய்வுகளினால் தடுக்கலாம்.
பொதுவாக வேதியியல் ஆய்வகத்தில் ஒரு பொருளின் அடர்த்தி, அமிலத் தன்மை, அளவு மற்றும் வடிவம் ஆகியவை ஆராயப்படுகின்றன. மேலும் பொருளின் மூலக்கூறு, அணுக்களின் அளவு ஆகியவையும் கணக்கிடப்படுகின்றன.
வேதியியல் துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு, ஆய்வக வேதியியல் படிப்பு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். வேதியியலில் பல்வேறு உட்பிரிவுகள் காணப்படுகின்றன. பகுப்பாய்வு வேதியியல், உயிர் வேதியியல், கனிம வேதியியல், மருத்துவ வேதியியல், கரிம வேதியியல், இயல்பியல் வேதியியல், கோட்பாட்டு வேதியியல் என பிரிவுகள் உள்ளன. இவை அனைத்திலும் ஆய்வக வேதியியலே முதன்மையானது. இவற்றில் ஏதாவது ஒரு பிரிவை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
தகுதி மற்றும் படிப்புகள்
ஆய்வக வேதியியல் பாடங்களை படிப்பதற்கு பிளஸ் 2வில் அறிவியல் பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். டிப்ளமோ, இளநிலை, முதுநிலை, பொறியியல் ஆகிய படிப்புகள் ஆய்வக வேதியியலில் உள்ளன.
* பி.எஸ்சி., எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி
* எம்.எஸ்சி., எலக்ட்ரோ கெமிஸ்ட்ரி
* பி.டெக்., சர்பேஸ் கோட்டிங் டெக்னாலஜி
* எம்.டெக்., எலக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்
* எம்.டெக்., சர்பேஸ் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங்
பொதுவாக வேதியியல் படிப்புகள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ளன. இவற்றில் உட்பிரிவுகள் இருக்கும் நல்ல கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுத்து படிப்பது சிறப்பானதாக இருக்கும். இந்த படிப்புகளுக்கு வெளிநாடுகளில் சிறந்த நிறுவனங்கள் உள்ளன.
வேலை வாய்ப்புகள்
ஆராய்ச்சி பொறியாளர், தொழில் நுட்பவியலார், ஆலோசகர், ஆசிரியர் போன்ற வேலைவாய்ப்புகள் வேதியியல் படித்தவர்களுக்கு உள்ளன. அரசு நிறுவனங்களிலும் வேதியியல் படித்தவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய பணிகள் இருக்கின்றன. அறிவியல் ஆய்வகங்களில் வேதியியலாளர்களின் தேவை அதிகம். வெளிநாடுகளிலும் ஆய்வக ஆராய்ச்சியாளருக்கு நல்ல பணிவாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பொதுவாக வேதியியல் படிப்பு முடித்தவர்களுக்கான தேவை அதிகமாகத்தான் இருக்கிறது. இதனால் இந்த துறையில் ஆர்வமுள்ளவர்கள், வேதியியல் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
very useful news for chemistry students thank you sir......
ReplyDelete