நீலகிரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு
இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா
பட்நாயக் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி, நீலகிரியில் அதிகபட்சமாக, தேவாலா
(இரண்டாம் சிரப்புஞ்சி) 44, அப்பர் பவானி 30, நடுவட்டம் 28 மி.மீ.,மழை அளவு
பதிவாகி உள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக, 169 மி.மீ., மழை பதிவாகியது.
நேற்று காலை 10:00 மணிக்கு மேல், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில்
மழையின் தாக்கம் அதிகரித்திருந்தது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும்
நாளை (இன்று) விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...