"சம்பள உயர்வில், ஆசிரியர்களுக்கு, பெரிய அளவில், மாற்றம் எதுவும் இல்லை" என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இது, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், ஆசிரியர்களுக்கு, 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய், கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு பெற, தர ஊதியம் உயர வேண்டும். இந்த தர ஊதிய அளவில், எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
அதேபோல், வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, கல்விப்படி ஆகியவற்றில், மாற்றம் வரும் என, எதிர்பார்த்தோம். அதுபோல், இந்த படிகளில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
உதவி தொடக்கக் கல்வி அலுவலரின் தர ஊதியம், 4,700 ரூபாயாக, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இவரின் கீழ் வேலை பார்க்கும் கண்காணிப்பாளரின் தர ஊதியம், 4,800 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களின் தர ஊதியம், 4,900 ரூபாயில் இருந்து 5,100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதிகாரிகள் அளவில், தர ஊதியம் உயர்த்தப்பட்ட போதும், இதை, ஆசிரியர்களுக்கு உயர்த்தவில்லை. இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...