நடிகர் சூர்யா நடித்து வெளிவந்துள்ள சிங்கம் - 2
படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களுக்கு தமிழக பல்கலைக்கழக ஆசிரியர்
கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளி அன்று திரைக்கு வந்த இந்த
திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளும் வசனங்களும், ஆசிரியர்களை
இழிவு படுத்தும் விதமாக இருப்பதாக தெரிவித்துள்ள த.ப.ஆ.கூ., படத்தின்
இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
சந்தானம் நடித்துள்ள காட்சிகளில், ஆசிரியர்களின் அறிவுத்திறமையை கேலி செய்யும் விதமாகவும், ஆசிரியர்கள் ஆபாசமான விசயங்களை போதிப்பதாகவும் தவறான மற்றும் மோசமான கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் கௌரவச் செயலார் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆசிரியர்களை இவ்வாறு கேலி செய்வது, அரசின் நியமன முறையையே கேள்விக்குறியாக்குவதாகவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய காட்சிகள் அமைத்த தயாரிப்பாளர்கள் இதற்காக மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படவேண்டும் என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு செய்யாவிடில், நீதிமன்றத்தினை கூட்டமைப்பு அணுகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...