பள்ளி கல்வித் துறையில், பல மாதங்களாக இழுபறியில் உள்ள அதிகாரிகள்
மாற்றம் மற்றும் பதவி உயர்வு, ஓரிரு நாளில் நடக்கும் என,
எதிர்பார்க்கப்படுகிறது.
கல்வித் துறையில், ஆசிரியர் கல்வி
ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் பணியிடம், இயக்குனர்
நிலையில், பாடநூல் கழகச் செயலர் பணியிடம் மற்றும் நூலகத்துறை, தேர்வுத்
துறையில், இரு இணை இயக்குனர் பணியிடங்கள் ஆகியவை காலியாக உள்ளன.
இரு இணை இயக்குனர்கள், பதவி உயர்வு நிலையில் உள்ளனர். எனவே, முதன்மை
கல்வி அதிகாரிகளாக உள்ள, நான்கு பேர், இணை இயக்குனர்களாக, பதவி உயர்வு
செய்யப்பட உள்ளனர். இணை இயக்குனர்கள் மாற்றங்களால், இயக்குனர் அளவிலும்,
மாற்றங்கள் நடக்கும் என, பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
எனினும், பல்வேறு காரணங்களால், அதிகாரிகள் மாற்றம், தள்ளிக்கொண்டே
போனது. இந்நிலையில், முதன்மை கல்வி அலுவலர்கள், ஐந்து பேர், மாற்றம்
செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சி.இ.ஓ., செல்வகுமார், விருதுநகர் மாவட்ட
சி.இ.ஓ.,வாக (ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,) மாற்றப்பட்டுள்ளார்.
தனி சி.இ.ஓ., ராமசாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்ட எஸ்.எஸ்.ஏ., சி.இ.ஓ., மகேஸ்வரி, அதே மாவட்டத்தில், ரெகுலர்
சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஆர்.பி.,யில், துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூபதி, திருச்சி
மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட சி.இ.ஓ.,
சுகன்யா மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவர், இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியலில் உள்ளார்.
எனவே, ஓரிரு நாளில், இணை இயக்குனர் பதவி உயர்வு பட்டியல் வெளியானதும்,
இணை இயக்குனராக, கன்யா பொறுப்பேற்பார் என, கூறப்படுகிறது.சி.இ.ஓ.,க்களை
தொடர்ந்து, தற்போதைய இணை இயக்குனர்கள் மற்றும் பல இயக்குனர்கள் மாற்றம்
செய்யப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
டி.ஆர்.பி.,யில், துணை இயக்குனராக பணிபுரிந்து வந்த பூபதி, திருச்சி மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார் சுத்தமான கை! எங்கள் திருச்சிக்கு வருவது எங்களுக்கு பெருமை, வாழ்த்துக்கள்.
ReplyDeleteWhen will announced DEO exam pls tell any body
ReplyDelete