Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி பணிகள் பாதித்தது - பயிற்சி வகுப்பு குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது -- நாளிதழ் செய்தி


ஆசிரியர்களுக்கு காபி, வடை "கட்': நிதி பற்றாக்குறையால் பயிற்சிகளும் குறைப்பு - நாளிதழ் செய்தி

           நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டதால், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அளிக்கப்படும் பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட காபி, வடை, பிஸ்கட் , "கட்' ஆனது, ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

         தமிழகத்தில், 2002 முதல், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு செயல்வழிக் கற்றல் பயிற்சியும், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. ஓர் ஆண்டுக்கு, இரு பிரிவிலும், 10 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். இதில், அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்பது கட்டாயம். பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு, டீ, காபி, வடை, பிஸ்கட் போன்றவை வழங்கப்படும். இது தவிர நாள் ஒன்றுக்கு, மதிப்பூதியம், 50 ரூபாய் வழங்கப்பட்டது. இத்திட்டங்களின், புதிய முறைகள் குறித்து, மாணவர்களுக்கு கற்றுத்தரும் முறையை, ஆசிரியர்களுக்கு தெரிவிப்பதே, இப்பயிற்சியின் நோக்கம்.

வகுப்பு குறைப்பு:

               இத்திட்டத்தில், ஒரு ஆண்டில், குறுவளமைய அளவில், 10 பயிற்சி வகுப்பும், ஒன்றிய அளவில், 10 பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன. ஆனால், தற்போது, இவை, மூன்று பயிற்சி வகுப்புக்களாக, திடீரென குறைக்கப்பட்டன. மேலும், பயிற்சியின் போது, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட காபி, வடை, பிஸ்கட்டும் நிறுத்தப்பட்டன. இத்திட்டத்திற்கு, ஒதுக்கப்பட்டு வந்த நிதி, இந்தாண்டு பல மடங்கு குறைக்கப்பட்டதே இதற்கு காரணம் என, திட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பட்டதாரி ஆசிரியர் கழக பொருளாளர் சூசைஅந்தோணிராஜ் கூறுகையில், ""பயிற்சியின்போது வழங்கப்பட்ட காபி, வடை போன்றவை ,"கட்'ஆனது, வருத்தம் அளிக்கிறது. அதேநேரத்தில், இத்திட்டத்தால், அதிக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது, ஆசிரியர்களின் பள்ளி பணிகள் பாதித்தது. தற்போது, பயிற்சி வகுப்பு குறைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது,'' என்றார்.




1 Comments:

  1. This training schedule applicable all over to Tamilnadu except Kanyakumari District.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive