டிஆர்பி அலுவலக குளறு படியால் ஹால்டிக்கெட் கிடைக்காத 8000 பேர் நேற்று போட்டித் தேர்வை எழுத முடியாமல் திரும்பினர். அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2881 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வுக்கு 1 லட்சத்து 67 ஆயிரத்து 662 பேர் தகுதி உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டனர்.
தேர்வுக்காக 32 மாவட்டங்களில் 421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. கேள்வித்தாள் கட்டு காப்பாளர், முதன்மை தேர்வாளர் மற்றும் துறை அலுவலர்கள் என 3387 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் மேற்பார்வையாளர்களாக 8383 பேர் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று நடந்த தேர்வில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 பேர் பங்கேற்றனர். 7912 பேர் தேர்வு எழுத வரவில்லை.
சென்னையில் 13927 பேர் விண்ணப்பித்து இருந்தனர். சென்னையில் 55 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் 12908 பேர் தேர்வு எழுதினர். 1019 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த போட்டி தேர்வில் பார்வைத் திறன் குறைவுடைய பட்டதாரிகளுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. பார்வைத் திறன் குறைவுடையோர், மாற்று திறனாளிகளுக்கு தரைத் தளங்களில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. பார்வைத்திறன் குறைவானவர்களுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதினர்.
நேற்று நடந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பே வெளியிடப்பட்டன. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை அதில் பதிவு செய்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருந்தது. அதன்படி முயற்சி செய்த பலருக்கு ஹால்டிக்கெட் கிடைக்கவில்லை.
இது குறித்து பட்டதாரிகள் புகார் தெரிவித்த பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் அதற்கு மாற்று ஏற்பாடு செய்தது. எந்த தேதியை பயன்படுத்தினாலும் ஹால் டிக்கெட் பெற முடியும் என்று அறிவித்தது. ஆனால், அதற்கு பிறகும் பலர் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என்று புகார் தெரிவித்தனர். கம்ப்யூட்டர் தொழில் நுட்ப கோளா றால் ஏற்பட்ட இந்த குளறுபடியால் நேற்றைய தேர்வில் சுமார் 8000 பேர் தேர்வு எழுதும் வாய்ப்பை இழந்தனர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...