முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2,881
காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 ஆசிரியர்கள் போட்டி
போடுகிறார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.
இணையதளத்தில் ஹால் டிக்கெட்
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் (கிரேடு–1) காலி இடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பி.எட். பட்டம் பெற்ற முதுகலை பட்டதாரிகள் போட்டிப்போட்டு விண்ணப்பித்தார்கள். தமிழ் பாடத்தில் 600–க்கும் மேற்பட்ட காலி இடங்கள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழ் முதுகலை பட்டதாரிகள் அதிகளவில் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டால் இணையதளத்திலேயே ஹால்டிக்கெட்டை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
1.67 லட்சம் பேர் போட்டி
முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் 2,881 காலி பணி இடங்களுக்கு ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 657 பேர் மோதுகிறார்கள். காலி இடங்கள் அதிகமாக இருப்பதால் தமிழ் பாடத்தில்தான் போட்டி பலமாக இருக்கிறது. தமிழ் பாடத்தில் மட்டும் 33,237 பேர் விண்ணப்பித்துள்ளனர். குறைந்தபட்ச எண்ணிக்கையாக அரசியல் அறிவியல் பாடத்தில் வெறும் 30 பேர் மட்டுமே விண்ணப்பம் போட்டுள்ளார்கள். இதர பாடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் விவரம் வருமாறு:–
ஆங்கிலம் – 14,080
கணிதம் – 22,497
இயற்பியல் – 12,469
வேதியியல் – 12,247
தாவரவியல் – 8,150
விலங்கியல் – 10,991
வரலாறு – 18,380
புவியியல் – 1,481
பொருளாதாரம் – 9,501
வணிகவியல் – 18,330
மனையியல் – 113
உடற்கல்வி இயக்குனர் – 3203
நுண்ணுயிரியல் – 1,544
உயிரி–வேதியியல் – 1,348
தெலுங்கு – 56
எழுத்துத்தேர்வு
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு 21–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது...

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...