ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், 2,527 இடங்கள் நிரம்பின. அரசு, அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என, 17 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதனை நிரப்ப, கடந்த மாதம், விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
4,419 மாணவர் விண்ணப்பித்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த, 8ம் தேதியில் இருந்து, 15ம் தேதி வரை, "ஆன்-லைன்' வழியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்தது. இதில், 2,527 மாணவர்கள் சேர்ந்தனர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில், 90 சதவீதம் பேர், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளிலும், 10 சதவீதம் பேர், தனியார் பள்ளிகளிலும் சேர்ந்தனர் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு, 10 ஆயிரம் இடங்கள் வரை காலியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு, 14,473 ஆக அதிகரித்துள்ளது. மொத்த இடங்களில், 14.86 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளன. விண்ணப்பித்த மாணவர்களில், 1,892 பேர், "ஆப்சென்ட்' ஆகினர்.
good sign about teaching job.
ReplyDelete