சென்னை மருத்துவக் கல்லூரிகளில்
அதிகரிக்கப்பட்டுள்ள, 85 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் திருவண்ணாமலை
அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர்
சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.,) இறுதி ஒப்புதல்
அளித்துள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி
மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் இருந்த முறையே, 165, 150 எம்.பி.பி.எஸ்.,
இடங்களை, தலா, 250 இடங்களாக அதிகரித்துக் கொள்ள, எம்.சி.ஐ.,யிடம் அனுமதி
கோரப்பட்டிருந்தது.
மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு முடிந்து, 15 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், குறிப்பிட்ட, இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளின் அதிகரிக்கப்பட்ட எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு, எம்.சி.ஐ., இறுதி ஒப்புதல் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஆகஸ்ட், முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மருத்துவக் கல்லூரியின் அதிகரிக்கப்பட்ட, 85 எம்.பி.பி.எஸ்., இடங்கள், இந்த ஆண்டு புதிதாக துவங்கப்பட்டுள்ள திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஆகியவற்றுக்கும், மாணவர் சேர்க்கை நடத்த, எம்.சி.ஐ., நேற்று இறுதி ஒப்புதல் வழங்கி உள்ளது.
கடந்த ஆண்டு துவங்கப்பட்ட சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியின், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு, இந்த ஆண்டும், மாணவர் சேர்க்கை நடத்தவும், எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின், அதிகரிக்கப்பட்டுள்ள, 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான இறுதி ஒப்புதல், ஓரிரு நாளில் வந்துவிடும்.
நடப்பு, 2013 - 14ம் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற்றுள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் குறித்த விவரம், ஜூலை, 15ம் தேதிக்கு பின் தெரிய வரும். அதையடுத்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படும் என, சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...