தமிழ்நாட்டில் 30 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 450–க்கும் மேற்பட்ட தனியார் பாலிடெனிக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இங்கு பல்வேறு என்ஜினீயரிங் பிரிவுகளில் 3 ஆண்டு கால பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு ஸ்ரீரங்கம், பெருந்துறை, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், ஜோலார்பேட்டை, செய்யார் உள்பட 11 இடங்களில் புதிதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கல்லூரிகளில் செய்யாறு கல்லூரி நீங்கலாக எஞ்சிய 10 கல்லூரிகளுக்கும் தலா 18 விரிவுரையாளர் பணி இடங்கள் வீதம் 180 விரிவுரையாளர் பணி அடங்களுக்கு அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்து உள்ளார்.
மொத்தம் உள்ள காலி பணி இடங்களில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய என்ஜினீயரிங் சாரா பாடப்பிரிவுகளும் அடங்கும். இந்த காலி பணி இடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
computer eligible
ReplyDelete