தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை
வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையமும் (டி.என்.பி.எஸ்.சி.,) ஆசிரியர் தேர்வு வாரியமும்
(டி.ஆர்.பி.,) மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு, வேலை
வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில், இரு அமைப்புகளும், மும்முரமாக
ஈடுபட்டுள்ளன.
குரூப்-4 தேர்வு மூலம், 5,566 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 25ல்,
போட்டித்தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை, 6 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில், 5,566 பேரும்
நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, மாதச்சம்பளம்
கிடைக்கும்.
இதேபோல், சுகாதாரத்துறையில், 2,594 உதவி மருத்துவர்களை நியமனம் செய்ய,
செப்டம்பர், 22ம் தேதி, போட்டித் தேர்வை நடத்துகிறது. இதனை, 10
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவை
மட்டுமில்லாமல், பல்வேறு குறைந்த பணியிடங்களுக்கான தேர்வுகளும், தொடர்ந்து
நடக்க உள்ளன.
அரசு பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை
ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான பணிகளில், டி.ஆர்.பி., ஈடுபட்டு வருகிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம், 15 ஆயிரம் இடைநிலை மற்றும் பட்டதாரி
ஆசிரியர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு, ஆகஸ்ட் 17, 18
தேதிகளில் நடக்கிறது.
இந்த தேர்வை, 7 லட்சம் பேர் வரை எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க, நாளை ஜூலை 1ம் தேதி கடைசி நாள். அரசு மேல்நிலைப்
பள்ளிகளில், 2,900 முதுகலை ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வை, ஜூலை,
21ம் தேதி நடத்துகிறது.
இந்த தேர்வை, 1.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். மேலும், அரசு கலை,
அறிவியல் கல்லூரிகளில், 1,100உதவி பேராசிரியர்களை நியமனம் செய்வதற்கான
பணிகளிலும், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது.மேலும், அரசு பள்ளிகளில், தையல்,
இசை, உடற்கல்வி ஆசிரியர்களும், நியமிக்கப்பட உள்ளனர்.
வரும் செப்டம்பருக்குள், இந்த அனைத்து பணி நியமனங்களும்
முடிக்கப்பட்டுவிடும் என்பதால், வேலை வாய்ப்பை எதிர்நோக்கியுள்ள
பட்டதாரிகள், உற்சாகம் அடைந்து உள்ளனர்.அதே நேரத்தில், பணி நியமனங்களே
நடக்காமல் உள்ள, இதர துறைகளில் உள்ள, காலி பணியிடங்களை நிரப்பவும், தமிழக
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பட்டதாரிகளின் எதிர்பார்ப்பாக
உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...