Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TETல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள்


Thanks to TeacherTN

              அனைவருக்கும் தரமான கல்வி, கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் என்ற நோக்கோடு செயல்படும் அரசு. முதலில் TET அறிவித்து அதில் தவறிவர்களுக்கு மீண்டும் மறுதேர்வு வைத்து அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு நேர்மையான முறையில் அதிரடியாக பணி நியமனம் வழங்கி பலரின் வாழ்வில் ஒளி ஏற்றியதை யாரும் மறுக்க முடியாது.

பிரச்சனைகள்/ கோரிக்கைகள

1.பல இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கல்வித்தகுதியை மேம்படுத்திக்கொள்ளும் பொருட்டு இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பை (B.Ed) கல்லூரியில் பணி நியமனத்திற்கு முன்பே பயின்று வந்தனர். பணிநியமனம் பெற்ற பின்பு அதை தொடர வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்படி தொடர விரும்பினால் பணியோ, பணி இடத்திற்கோ எவ்வித உத்திரவாதமும் அளிக்க முடியாது என தெரிவித்ததாலும் அதற்கான படிவத்தில் உறுதி கோரியதாலும், பலர் தங்கள் கல்வியை இழந்தனர்.

ஆனால், சில மாவட்டங்களில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரனம்: நாமக்கல், திருச்சி , ஈரோடு மாவட்டங்களில் TET மூலம் பணி நியமனம் பெற்றவருக்கு கல்லூரியில் தன் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பை தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை அனைவருக்கும் பின்பற்றப்படவில்லை.

பாதிச்சம்பள விடுப்பிற்கு தான் ஐந்து வருட கால பணி அனுபவம் தேவை. தாங்கள் முழு சம்பளமில்லா விடுப்பு கோருவதால் விதிகளில் இடமிருந்தால் தங்களுக்கு உரிய விடுப்பை அளிக்க ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

2.இடைநிலை ஆசிரியர்கள் பலர் தங்கள் இளங்கலை பட்டப்படிப்பு (UG) மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) கல்வித்தகுதிகளை ஒரே வேலைவாய்ப்பக அட்டையிலேயே தான் பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், பணி நியமனம் பெற்றவுடன் வேலைவாய்ப்பக அட்டை இரத்து செய்யப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் தங்கள் இடைநிலை ஆசிரியர் கல்வி மட்டும் இரத்து ஆகாமல் தங்களுடைய இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு கல்வித்தகுதிகளும் இரத்தாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அப்படி இரத்தானால், தங்கள் கல்வித்தகுதிகளுக்கான பதிவு மூப்பு காலவதி ஆவதோடு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத முடியாத சூழல் ஏற்படும். இதற்கும் பல மாவட்டங்களில் ஒன்றியங்களில் முறையாக அனுமதி வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பல ஒன்றியங்களில் இதற்கு ஆசிரியர்கள் பெரிதும் அலைகழிக்கப்படுகிறார்கள்.

3.அடுத்த TRB - TNTET தேர்விற்கு, இடைநிலை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி/ முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளை எழுத “தடையில்லா சான்று”(NOC) பெற வேண்டும். பல அலுவலகங்களில் “தடையில்லா சான்று” வழங்க முடியாது என்றும், சில அலுவலகங்களில் தகுதிகாண் பருவம் முடித்தால்தான் வழங்க முடியும் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சரியான நடைமுறை புதிய ஆசிரியர்களுக்கு தெரியாததால், பெரும் மனச்சங்கடத்திற்கு உட்பட்டுள்ளனர்.

உரிய தகுதியோடு வேண்டுவோர்க்கு “தடையில்லா சான்று” வழங்கி தங்கள் பதிவு மூப்பை காப்பதோடு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளை எழுத வாய்ப்பளித்து வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

4.இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் இளங்கலை பட்டம், இளங்கலை கல்வியியல் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் ஆகியவற்றை முடித்துள்ளனர். அதற்கான ஊக்க ஊதிய நிர்ணயத்திற்கு “உண்மைத்தன்மை சான்று” பெற கோரினால். “இன்னும் நீங்கள் முறைப்படுத்தப்படவில்லை” (Regularisation) என்றும் “தகுதிகாண் பருவம் (Probation) முடித்தால்தான் “உண்மைத்தன்மை சான்று” பெறவே முயல வேண்டும், அதன் பிறகு தான் தங்களுக்கு ஊக்க ஊதியம் நிர்ணயித்து வழங்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

5.முறையாக கல்லூரியில் பயில்வதற்கு மட்டும் இன்றி தொலைநிலைக் கல்வி (Distance) மூலம் பயில்வதற்கு கூட தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும் என சில ஒன்றியங்களில் கூறுவது, தங்கள் கல்வித்தகுதியினை மேம்படுத்திக்கொள்ள பெரும் தடையாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

இளங்கலை கல்வியியல் பட்டம் (B.Ed) தொலைநிலைக் கல்வி (Distance) மூலம் பயில இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. ஆனால், தாங்கள் பணி நியமனத்திற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணியாற்றிய பணிக்காலம் இதற்கு ஏற்புடையது என்பதை ஏற்க மறுப்பதால், தங்களுக்கான கல்வி வாய்ப்பு கேள்விக்குரியாக மாறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மேற்கூரிய பிரச்சனைகள் எல்லா ஒன்றியங்களிலும் இல்லை. ஆனால் பெரும்பாலான ஒன்றியங்களில் உள்ளது. கல்வித்துறையில் மாபெரும் மாற்றங்களை வரவேற்கத்தகுந்த முறையில் செயல்படுத்தி வரும் இந்த சீர்மிகு அரசும் அதற்கு இணையாக துரிதமாக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வரும் அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும் எங்களுடைய கோரிக்கைகளின் மிது கவனம் செலுத்தி எங்களுக்கான நியாயமான உரிமைகளை தெளிவுப்படுத்தி வழிகாட்டி வாய்ப்பளிக்க வேண்டுமென பணிவுடன் கோரிக்கை வைத்துள்ளனர்.




1 Comments:

  1. Reasonable queries. Higher official can solve the problem if the concentrate in this Problem

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive