Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற என்ன செய்ய வேண்டும்?

          
*  பயிற்சி நிலையங்களில் மீது வைக்கின்ற நம்பிக்கையை முதலில் உங்கள் மீது வைக்க வேண்டும்.

*  மனம் மற்றும் உடல் இரண்டையும் தேர்வுக்குத் தயாராக்க வேண்டும்.

*  சுய சிந்தனையுடையவராய் உங்களை நீங்கள் நினைக்க வேண்டும்.

*  தேர்வுக்குத் தயார் செய்வதற்கு செலவிடும் காலத்தையும், வருவாய் இழப்பையும் வாழ்நாள் முதலீடாக கருத வேண்டும்.

*  தகுதித் தேர்வை வெறுக்காமல் வாழ்க்கையில் கிடைக்க பெற்ற வரப்பிரசாதமாகவும், உங்களின் திறமைக்கு விடப்பட்ட சவாலாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

*  தகுதித் தேர்வினை ஆதரிக்காவிட்டாலும் அதை எதிர்க்காத மனநிலையைப் பெற்றிருந்தால் அல்லது இனி பெறப்படுவீர்கள் என்றால் உங்கள் வெற்றி உங்களால் உறுதி செய்யப்படும்.

*  முதலில் சந்தையில் கிடைக்கும் கண்டதை எல்லாம் படிக்காமல் தேவையானதை மட்டும் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

*  6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த 9,10,11,12-ம் வகுப்பு பாடங்களை ஏன் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூக்கி எறிய வேண்டும். அதாவது நம்முடைய வாழ்க்கை முழுவதும் சமூகத்தில் மரியாதையையும், பிற பணிகளில் கிடைக்கும் சலுகைகள் மற்றும் இதர பயன்களையும் அளிக்கப் போகும் இந்த தகுதித் தேர்வின் வெற்றிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மிகவும் குறைவு என்ற எண்ணம் முதலில் வரவேண்டும்.

*  6 முதல் 12 வகுப்பு வரை அனைத்து பாடங்களையும் வாசிக்க வேண்டும். அதுவே தேர்வின் பயத்தினை போக்கி, அதிக மதிப்பெண்ணை பெற்றுத்தரும்.

*  ஒவ்வொரு பாடத்தையும் வாசித்து விட்டு அதில் 30/30, 60/60 எடுத்துவிடுவேன் என்ற நிலையை அடைந்த பிறகு அடுத்த பாடத்திற்கு செல்வது மிகவும் பயனளிக்கும்.

இவ்வாறு உங்களின் திட்டமிடுதல் இருந்தால் பிற பாடங்களை படிக்க முடியாமல் போனாலும் கூட அதிலிருந்து எப்படியும் 12/30 மதிப்பெண்களை பெற்று விடலாம்.

அதாவது 30+30+12+12+12=96 தகுதி மதிப்பெண்களை பெறுவது மிகவும் எளிது.

*  தொடர்ந்து படிப்பதும் சலிப்பை உண்டுபண்ணும். அதனால், சின்னச் சின்ன இடைவெளிகளில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

*  சைக்காலஜிக்கென்று கண்டதையெல்லாம் வாங்கி படிப்பதைவிட பேராசியர்.கி.நாகராஜன் அவர்களால் எழுதப்பட்ட கல்வி உளவியல் புத்தகங்களை வாங்கி படிக்கலாம்.

*  தமிழ், கணிதம் - அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம், உளவியல் என்ற வரிசையில் ஒவ்வொரு பாடமாக படித்து முடித்த பின்னர் அடுத்த பாடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.

*  எந்தவிதத் தடுமாற்றமோ, பயமோ இல்லாமல், மிகவும் இயல்பாகத் தேர்வுகளைச் சந்தியுங்கள்.

*  ஒரு தேர்வு முடிந்ததும் அதைப் பற்றிய கவலைகளை விட்டுவிட்டு, அடுத்த நிலைக்கு தயாராகுங்கள்.

படித்ததை படிப்பவர்களோடு பகிர்ந்து கொண்டால் பலன்கள் பல பெறலாம். வாழ்த்துக்கள்.




4 Comments:

  1. thank for valuable information

    ReplyDelete
  2. always the good to hear by our ear and please keep up sure success reach you.

    ReplyDelete
  3. thanks ......................................

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive