அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-600 006 ஜுன்/ஜுலை 2013-ல் நடைபெறவுள்ள
இடைநிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
நடைபெறவுள்ள ஜுன்/ஜுலை, 2013 இடைநிலை சிறப்புத் துணைத் தேர்வெழுத தகுதியான தனித்தேர்வர்களிடமிருந்து ஆன்-லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்வர்கள் www.det.tn.nic.in என்ற இணைய தளத்திற்குச் சென்று, அதில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி, விவரங்களைப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:
1. மார்ச் 2013, இடைநிலைத் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
2. மார்ச் 2013, இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
அறிவியல் பாட செடீநுமுறைத் தேர்வு : மார்ச் 2013, இடைநிலைப்பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்விற்கு அறிவியல் பாடம் தவிர இதர பாடங்களில் தேர்வெழுத நீதிமன்ற /மாவட்ட ஆட்சியரின் ஆணையின்படி அனுமதிக்கப்பட்டவர்கள் தற்போது அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்து கொள்ள உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயிற்சியில் கலந்து கொண்டு செய்முறைத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அவர்கள், ஜுன் 2013 உடனடித் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை: மார்ச் 2013 இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெறாத/வருகை புரியாத அனைத்து பாடத்திற்கும் ரு.125/- தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்-லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட Confirmation Copy மூலமே தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் . பதிவிறக்கம் செய்த சலானில் குறிப்பிட்டுள்ள தொகையினை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் எந்தவொரு கிளையிலும் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயரில் தேர்வுக் கட்டணத் தொகையினை செலுத்தலாம். பாடசாலை
2... முக்கிய குறிப்பு : பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள பத்து இலக்க விண்ணப்ப எண்ணை தவறாமல் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே எந்தவொரு சந்தேகங்களுக்கும், தேர்வுத் துறையிடம் முறையீடு செய்யவோ அல்லது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பெறவோ முடியும். எனவே, பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை ஒளிநகல் (Xerox) எடுத்து தனித்தேர்வர்கள் தங்கள்வசம் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதிகள்:
தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 03.06.2013 (திங்கட் கிழமை) முதல் 05.06.2013 (புதன்கிழமை) நண்பகல் 12 மணிவரை தங்கள் விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செடீநுயலாம். பதிவு செய்த விண்ணப்பத்தினையும், தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான Bank சலானையும் 05.06.2013 நண்பகல் 12 மணிவரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் செலுத்த வேண்டிய இறுதி தேதி 06.06.2013 (வியாழக் கிழமை) . செலுத்த வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும்.
தேர்வர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் 03.06.2013 (திங்கட் கிழமை) முதல் 05.06.2013 (புதன்கிழமை) நண்பகல் 12 மணிவரை தங்கள் விண்ணப்பத்தினை ஆன்-லைனில் பதிவு செடீநுயலாம். பதிவு செய்த விண்ணப்பத்தினையும், தேர்வுக்கட்டணம் செலுத்தியதற்கான Bank சலானையும் 05.06.2013 நண்பகல் 12 மணிவரை மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். தேர்வுக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் எந்தவொரு கிளையிலும் செலுத்த வேண்டிய இறுதி தேதி 06.06.2013 (வியாழக் கிழமை) . செலுத்த வேண்டிய நேரம் வங்கியின் விதிகளுக்குட்பட்டதாகும்.
ஆன்லைனில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை சமர்ப்பித்தல் :
அ) பள்ளி மாணாக்கர் உடனடித் தேர்விற்கான Confirmation Copy எனக் குறிப்பிட்ட ஆன்லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக்கட்டணம் செலுத்திய SBI Bank சலான் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் விவரப்பட்டியல் ஆகியவற்றை இணைத்து அவர்கள் பயின்ற பள்ளித் தலைமை ஆசிரியரிடம் 06.06.2013-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆ) மார்ச் 2013, இடைநிலைத் தேர்வினை தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்ச்சி பெறாதோர் உடனடித் தேர்விற்கான Confirmation Copy எனக் குறிப்பிட்ட ஆன்-லைன் விண்ணப்பத்துடன், தேர்வுக்கட்டணம் செலுத்திய SBI Bank சலான் மற்றும் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் விவரப்பட்டியல் ஆகியவற்றை இணைத்து அவர்தம் வருவாய் மாவட்டத்திற்குரிய அரசுத் தேர்வுகள் மண்டலத்துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக மட்டுமே 10.06.2013-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தபால் மூலம் அனுப்பும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
ஜுன் / ஜூலை 2013 சிறப்பு துணைத் தேர்வுகள் 24.06.2013 முதல் 01.07.2013 வரை நடைபெறும். நாள் : 29.05.2013 - பாடசாலை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...