நடந்து
முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் இந்த முறையும் மாணவிகளே சாதனையில்
முன்னணியில் வந்தனர். அதே போல அரசு பள்ளிகளில் படித்தவர்களின் தேர்ச்சி
விகிதமும் கூடி இருந்தது.... மாநிலத்தில் இரண்டாம் இடமும் அரசு பள்ளி
மாணவியே அடைந்தார்...இந்நிலையில் சேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை நோக்கி படை எடுக்கின்றனர் மாணவிகள்.
சேலம்
நகர மைய்யதிலேயே இந்த பள்ளி இருக்க 11 ஆம் வகுப்பிற்கு விண்ணப்பங்கள்
வாங்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான மாணவிகள்
குவிந்துவிட்டனர்...அரசு பள்ளியில் படிக்க செலவுகள் குறைவு எங்களை போன்ற
ஏழை மாணவ மாணவிகளுக்கு அரசு பள்ளி தான் எளிமையானதாக உள்ளது. அதே சமயம்
நன்றாக சொல்லி தருகின்றனர் என்றனர் மாணவிகள்
எங்கள் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு முன்னுரிமை
அளிக்கிறோம்...முதலில் 400 க்கு மேல் எடுத்தவர்களிடம் விண்ணப்பம் வாங்கி
வருகிறோம் பின் ஒவ்வொரு நாளாக அதற்க்கு கீழ் வாங்கிய மாணவிகளின்
விண்ணப்பங்கள் பெறுவோம். நிச்சயம் அனைவரும் மேற்படிப்பு பயில வாய்ப்புண்டு'
என்றனர் பள்ளி ஆசிரியர்கள். அரசு பள்ளிகளை நோக்கி மாணவ மாணவிகள் கவனம்
திரும்பியிருப்பது ஆரோக்கியமான ஒன்றே.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...