அரசு பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வியை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.2013-14ம் கல்வி ஆண்டில் 6 முதல் 8ம் வகுப்பு
வரை கட்டாயம் படைப்பாற்றல் கல்வியை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு
உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநரகத்தின்
உத்தரவு:
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை
பள்ளிகளில் உள்ள 6, 7, 8 வகுப்புகளில் படைப்பாற்றல் கல்வி முறை
செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதை செயல்படுத்துவதில் சுணக்கம் உள்ளதாக தெரிகிறது.இதை தவிர்ப்பதற்காக ஒன்றிய அளவில் உள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வி முறையில் ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களும் பள்ளிகளை ஆய்வு செய்யும்போது, படைப்பாற்றல் கல்வி முறையில் பாடம் கற்பிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் படைப்பாற்றல் கல்விமுறையில் கற்பிப்பதை கண்காணிக்க வேண்டும். படைப்பாற்றல் கல்விமுறையில் கற்பிக்காத பள்ளிகளை ஒன்றியங்கள் வாரியாக தொகுத்து மாநில திட்ட இயக்குநருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...