Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்லூரி நேர்முகத்தேர்வுக்கு தயாராவது எப்படி?


          விருப்பமான கல்லூரியில் விண்ணப்பத்தை அளித்துவிட்டு வீட்டிற்கு மகிழ்வுடன் திரும்பினாலும், மனதிற்குள் இந்த மதிப்பெண்ணிற்கு இங்கு இடம் கிடைக்குமா? என்ற மனக்கலக்கம் நமக்குள் இருக்கும். இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பத்தில், வேறு சில கல்லூரிகளுக்கும் நமது விண்ணப்பங்களை அனுப்பியிருப்போம்.
             நமக்கு மிகவும் பிடித்த கல்லூரியிலிருந்து  நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வருகிறது. வந்தவுடன், அங்கு நாம் எப்படி நடந்துகொள்வது? எப்படி பதில் சொல்வது? என்ற பதட்டத்தில் இருப்போம். அப்படிப்பட்ட நிலையில் நாம் அந்தக் கல்லூரி நேர்முகத்தேர்வை எப்படி எதிர்கொள்வது? ஏனெனில், சிறந்த கல்லூரியில் போட்டிகள் நிறைந்த மதிப்பெண்ணுக்கு இடம் கிடைப்பது என்பது எளிதான விசயம் அல்ல...
              நேர்முகத்தேர்வு நாளன்று சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்துங்கள். உங்கள் தோற்றம், நேர்முகத்தேர்வை அக்கறையுடன் எதிர்கொள்பவராக காட்ட வேண்டும். நன்றாக அயர்ன் செய்யப்பட்ட சட்டையுடனும், நன்கு வாரிய தலை முடியுடனும், நிமிர்ந்த நடையுடனும் உற்சாகமாக கல்லூரிக்கு செல்லுங்கள்.
              கல்லூரிக்கு செல்லும்பொழுது அந்தக் கல்லூரியைப் பற்றிய விபரங்களை அறிந்துகொள்ளுங்கள், அதனோடு நீங்கள் படிக்க விரும்பும் பாடத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அந்தப் படிப்பைப் பற்றிய உங்கள் மேலான எண்ணங்களை வெளிப்படுத்த தயங்காதீர்கள். ஏனெனில் கல்லூரிகள் வெறுமனே படிக்கும் மாணவர்களை விட ஆர்வமுடன் படிக்கும் மாணவர்களையே விரும்புகிறது.
        நேர்முகத்தேர்வில் தேர்வாளரின் முகத்தைப்பார்த்து நேரடியாக பதில் சொல்லுங்கள். வார்த்தைகள் அழுத்தம் திருத்தமாக தெளிவாக இருத்தல் வேண்டும். ஒரு சிலவற்றை கூறும்பொழுது, சில எடுத்துக்காட்டுகளை சொல்லலாம். ஆனால் அதே நேரம் அந்த எடுத்துக் காட்டுகள் கேள்வியை திசை மாற்றுவதாக இருத்தல் கூடாது. ஏதேனும் உங்களுக்கு பிடிக்காத கேள்விகள் இருந்தால் விவாதம் செய்யாதீர்கள். அவர்கள் பார்வையில் சிந்தித்து பதில் சொல்ல முயற்சி செய்யுங்கள்.
          நேர்முகத்தேர்வுக்கு நீங்களும் சில கேள்விகளுடன் ஆயத்தமாக செல்லுங்கள். பல நேர்முகத்தேர்வாளர்கள் உங்களிடம் ஏதேனும் கேள்விகள் இருக்கிறதா? என்பதை அறிய முயற்சிப்பார்கள்.  அப்பொழுது உங்கள் சந்தேகங்களை அறிவுப்பூர்வமாக கேட்க முயற்சி செய்யுங்கள்.
           நேர்முகத்தேர்வின்போது நிமிர்ந்து உட்காருங்கள். தேர்வாளரின் மேசையின் மீது கைகளை வைக்காதீர்கள். நகைகள் மற்றும் இதர தேவையில்லாத அணிகலன்களை அணிந்து செல்ல வேண்டாம். நேர்முகத் தேர்வில் உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளையோ, பொருளாதாரத் தேவைகளையோ கூறாதீர்கள்.
          நேர்முகத்தேர்வில் நகைச்சுவையாக பதில் அளிப்பதை தவிருங்கள். உங்களுக்கு நகைச்சுவையாகத் தெரிவது பிறருக்கு தவறாகத் தெரியலாம். தன்னம்பிக்கையோடு செல்லுங்கள். போலித்தனமான பதில்களுடன் குழப்பமாக செல்ல வேண்டாம். உற்சாகமாக தைரியத்துடன் செல்லுங்கள். வெற்றி உங்களுக்கே!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive