Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?




           USB என்றால் என்ன என்று நமக்குத் தெரியும். Universal Serial Bus என்பதின் குறுக்கமே USB ஆகும். இது தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக எடுத்துச் செல்லப் பயன்படுகிறது. தகவல்களை சேமிக்கப் பயன்படும் ஒரு Removable Disc தான் இந்த பென்டிரைவ். இந்த USB என்று சொல்லக்கூடிய Pendrive-ல் பாஸ்வேர்ட் அமைத்துப் பயன்படுத்துவது எப்படி எனப் பார்ப்போம்.


பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட்டா? என கேட்கிறீர்களா?
         ஆம்.. பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுத்துப் பாதுகாப்பதால் நம்முடைய கோப்புகள், தகவல்கள் களவு போகாமல் பாதுகாக்கலாம். வேறு ஒருவர்பயன்படுத்தவதை தடுக்க முடியும். சாதாரண கோப்புகள் என்றால் பரவாயில்லை.முக்கியமான மதிப்புமிக்க கோப்புகளாக இருப்பின் பாதுகாப்பு அவசியம்தானே..?

பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி?

         பென்டிரைவிற்கு பாஸ்வேர்ட் கொடுக்க பல மென்பொருள்கள் இருக்கின்றன. இதில் Usb Flash Sequrity என்ற இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பாஸ்வேர்ட்கொடுப்பது எப்படி எனப் பார்ப்போம்.

         அளவில் சிறிய இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
தரவிறக்கச் சுட்டி: Usb Flash Sequrity

           இந்த தளத்திலேயே மென்பொருள் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என தெளிவாக விளக்கியிருக்கிறார்கள். எனவே அதிக விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்.

           மென்பொருளில் உங்கள் பிளாஸ் டிரைவை(USB) தேர்ந்தெடுத்து பாஸ்வேர்ட் அமைத்துக்கொள்ளுங்கள். பிறகு உங்கள் பென்டிரைவை கணினியில் இணைக்கும்போது UsbEnter.exe மற்றும்Autorun.inf ஆகிய இரண்டு கோப்புகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும்.
         அதில் UsbEnter.exe மற்றும் Autorun.inf ஆகிய இருகோப்புகளில் UsbEnter.exe என்ற கோப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள் பாஸ்வேர்ட் கொடுத்துமீண்டும் உங்கள் பென்டிரைவை திறந்து பயன்படுத்தலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive