ஈரோட்டில் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகிக்கும் பணி துவங்கிய 15 நாளில் 127 விண்ணப்பங்கள் மட்டுமே விற்றுள்ளன.
ஆண்டுதோறும், 40 ஆயிரத்து 710 மாணவர்களும், 63 ஆயிரத்து 350
மாணவியருமாக மொத்தம், ஒரு லட்சத்து 4,060 பேர் ஆசிரியர் பயிற்சி படிப்பு
முடிந்து வெளியேறுகின்றனர். இப்பயிற்சி பள்ளியில் ப்ளஸ் 2 முடித்த மாணவ,
மாணவியருக்கு, ஆசிரியர் பணிக்கு முன் பயிற்சி, பணியிடை பயிற்சி என
இருவகையான பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக
இப்பயிற்சியின் மீது மாணவர்களுக்கு ஆர்வமின்மை காரணமாக, அட்மிஷன் எண்ணிக்கை
வெகுவாக குறைந்தது.
நடப்பு 2013-14 கல்வியாண்டுக்கான ஆசிரியர் பயிற்சி
படிப்புகளில் சேருவதற்கு, தமிழகம் முழுவதும் மே., 27 முதல் ஜூன்., 12
(இன்று) வரை விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எஸ்.சி.,
எஸ்.டி., பிரிவினர் 250 ரூபாயும், இதர பிரிவினர் 500 ரூபாய் ரொக்கமாக
செலுத்தி விண்ணப்பங்களை வாங்கிய இடத்திலேயே ஜூன்., 12ம் தேதி மாலை 5
மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டது.
மாணவர்கள் சேர்க்கை ஆன்-லைன் வழியில் நடக்கவுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு சி.இ.ஓ., அலுவலகத்திலும், பெருந்துறை
"டயட்" நிறுவனத்திலும் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
விண்ணப்பம் வினியோகிக்கும் பணி துவங்கி 15 நாட்களாகியும், ஈரோட்டில் வெறும்
127 விண்ணப்பங்கள் மட்டுமே விற்றுள்ளன.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரி
ஒருவர் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு ஆர்வம் குறைவால்,
பெருந்துறையில் 108 விண்ணப்பங்களும், ஈரோட்டில் வெறும் 19 விண்ணப்பங்கள்
மட்டுமே விற்றுள்ளன. துவக்க நாளில் இருந்து மொத்தம் 127 விண்ணப்பம் மட்டுமே
விற்றுள்ளன, என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...