Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வு வென்றவர் வழிகாட்டுகிறார்! மோகனன்


           கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல்தாளில் 150-க்கு 122 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த திவ்யா, இரண்டாம் தாளிலும் தேர்ச்சி பெற்று தற்போது உடுமலைப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். 
 
          ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுபவர்களுக்கு தனது அனுபவத்திலிருந்து திவ்யா கூறும் யோசனைகள் இதோ...
 
          ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகறீங்கன்னா முதல்ல உங்களால முடியும்னு நம்புங்க! நம்மை விட சிறிய வயது மாணவர்கள் படித்து பாஸாகும் பாடங்களைத்தான் நாம் படிக்கப் போகிறோம். அதிலிருந்துதான் கேள்விகள் இருக்கும் என்பதை மறக்காமல், உங்கள் வாழ்க்கைக்கு ஆசிரியப்பணி என்ற அடித்தளத்தை அமைத்துத் தரப்போகும் தேர்வு இது என்பதால் விருப்பத்தோடு படியுங்கள்.

           தமிழைப் பொருத்தவரையில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப் புத்தகங்களைப் படிப்பது நல்லது. ஒவ்வொரு பாடங்களுக்குப் பிறகும் மதிப்புக் கல்வி என்று சிறுசிறு பாடங்களைக் கொடுத்திருப்பார்கள். அதை தவறாமல் படித்துக்கொள்ளுங்கள். அதிலிருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. செய்யுள்கள், பாடல்கள் போன்றவற்றை எழுதிய ஆசிரியர்கள் யார்? அவர்களது புனைப்பெயர்கள் என்ன? அவர்கள் எழுதிய மற்ற நூல்கள் என்ன என்பனவற்றை தனியாக ஒரு நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு, அடிக்கடி படித்துக் கொள்ளவேண்டும். உரைநடைப் பகுதியில் உள்ள பாடங்களில் ஒவ்வொரு வரியையும் படித்துவையுங்கள். அதில் முக்கியமான பாயிண்டுகளை தனியே எழுதி வைத்துக்கொண்டு, அடிக்கடி திருப்பிப் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழ் இலக்கணப் பகுதி மிக முக்கியம், அதையும் நன்கு படித்துக்கொள்ளுங்கள்.

           ஆங்கிலத்தைப் பொருத்தவரை 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை உள்ள ஆங்கிலப் புத்தகத்தில் உள்ள அடிப்படை இலக்கணங்களைப் படித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் உள்ள ஆங்கில வார்த்தைக்கு அர்த்தங்கள், எதிர்ப்பதங்கள் போன்றவற்றை தனியே எழுதிவைத்துக் கொண்டு அடிக்கடி படித்துக் கொள்ளுங்கள்.

                கணிதத்தைப் பொருத்தவரை 10-ஆம் வகுப்பு வரை உள்ள கணக்குகளை அடிக்கடி போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் 8,9,10-ஆம் வகுப்பு கணக்குகள் கொஞ்சம் கடினமாகத் தோன்றலாம். அதை அடிக்கடி போட்டு பழகிக்கொள்ளுங்கள். கணிதத்தில் அளவியல், கன அளவு போன்ற தலைப்புகளில் நிறைய சூத்திரங்கள் இருக்கும். கணித சூத்திரங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்துகொள்ள வேண்டும்.

                    அறிவியலைப் பொருத்தவரை 10-ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களை படித்துக் கொள்ளுங்கள். முக்கியமான விதிகள், விஞ்ஞானிகளின் பெயர்கள், கண்டுபிடிப்புகள் போன்றவற்றை தனியே எழுதி வைத்துக்கொண்டு படிக்க வேண்டும். முக்கியமான பாயிண்ட்ஸ்களை அடிக்கோடிட்டு படித்துக் கொள்ளவேண்டும். அறிவியல் புத்தகங்களை குறைந்தது ஆறு முறையாவது படித்துக்கொண்டால் தேர்விற்குத் தயாராகிவிடலாம்.

               நான் கணிதப் பிரிவை சேர்ந்தவள் என்பதால் எனக்கு சமூக அறிவியல் பாடம் இல்லை. இருப்பினும் சமூக அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற எனது நண்பர்களிடம் கேட்டபோது, ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள், ஆண்டுகள், அரசர்கள், ஆட்சிப் பகுதிகள், தலைநகரங்கள், முக்கியமான போர்கள் ஆகியவற்றை படித்துக்கொள்ள வேண்டும். பொருளாதாரமும் படித்து வைத்துக்கொள்ளுங்கள். குடிமையியல், புவியியல் போன்றவற்றையும் தனித்தனியே நோட்ஸ் எடுத்து வைத்து படித்துக் கொண்டால் அதில் தேர்ச்சி பெற்றுவிடலாம்’ என்றார்கள்.

             உளவியலைப் பொருத்தவரையில், ஒரு சூழ்நிலையைக் கொடுத்து அதற்கு சிந்தித்து பதிலளிக்கும்படியான கேள்விகளே அதிகமாக இருக்கும். அதற்காக உளவியல் பாடத்தை படிக்காமல் இருந்துவிடக் கூடாது.

                   தேர்வுக்கு தற்போது இருக்கும் காலஅவகாசத்தில் பாடங்களைப் படித்து தயாராவதற்கு போதிய நேரம் இருக்கிறது. திட்டமிட்டு ஆர்வத்துடன் படியுங்கள். வெற்றி உங்கள் காலடியில்" என்கிறார் திவ்யா.




3 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive